கண்ணீர் விட்டு அழுத குஷ்பூ,, அதிரடி செய்த ஸ்டாலின்..கைது செய்த போலீஸ்.

ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் நடிகை குஷ்பு குறித்து தரக்குறைவாக விமர்சித்துப் பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ண மூர்த்தியை சென்னை கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

சென்னை வடக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் இரு தினங்கள் முன்பு நடைபெற்றது. இதில் பங்கேற்ற சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என்ற திமுக  மேடைப் பேச்சாளர், ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக உள்ள நடிகை குஷ்பு ஆகியோர் குறித்து அவதூறான கருத்துக்களைத் தெரிவித்து இருந்தார்.

இதுபற்றி சென்னையில் பேட்டியளித்த நடிகை குஷ்பூ,, ,, “திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என்பவர் நேற்று சென்னையில் நடைபெற்றக்  கூட்டத்தில் என்னைப் பற்றி மிகவும் இழிவாகப் பேசி இருக்கிறார். . அவர் ஏற்கனவே கட்சியில் இருந்து நீக்கப்பட்டு மீ்ண்டும் சேர்க்கப்பட்டவர்.  அதன் பிறகும் என்னைப் பற்றி இழிவாக பேசுகிறார். அவரது பேச்சை சிலர்  யூ டியூப்பில் பதிவேற்றம் செய்கிறார்கள். அவர்களும் ஒரு தாய்க்கு  பிறந்தவர்கள் தானே..

இதனை நான் சும்மா விடப்போவதில்லை. நான் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக உள்ளேன். எனக்கே இந்த நிலை என்றால் மற்றப் பெண்களின் நிலை என்னவாக இருக்கும். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விட்டது. நிச்சயம் ஒரு வருட சிறைத் தண்டனை கிடைக்கும்.

பாரதீய ஜனதா உறுப்பினராக நான் தெரிவிக்கும் கருத்துகளுக்கு பதில் சொல்ல முடியாமல் இது போன்ற ஆட்களை விட்டு இழிவாகப் பேசச் சொல்கிறார்கள்.இது தான் புது திராவிட மாடல் ஆட்சியா?

நான் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சொல்வது எல்லாம் என்னை சீண்டிப் பார்க்க வேண்டாம் என்பதுதான். என்னை சீண்டினால் திருப்பி  அடிப்பேன்.  அதற்கான வலு எனக்கு  இருக்கிறது..

இவ்வாறு பேட்டி அளித்த குஷ்பூ கண்ணீர் விட்டு அழுதார்.

இந்தக் கட்சியைப்  தொலைக் காட்சிகளில் பார்த்த முதலமைசர் மு.க.ஸ்டாலின் உடனடியாக திமுக பேச்சாளர் சிவாஜி கிருண்மூர்த்தியை திமுக வின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளிலுல் நீக்குவதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் பெயரில் வெளியிடச் செய்தார்..

இதனை அறிந்த குஷ்பூ,, உடனடியாக நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பதாக  கூறினார்.

இருந்தாலும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது சட்ட் படியான நடவடிக்கை தொடரும் என்று தெரிவித்தார்.

குஷ்பூவின் கண்ணீரும் ஸ்டாலினின் அதிரடி நடவடிக்கையும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே சிவாஜி கிருஷ்ண மூர்த்தி மீது சென்னை கொடுங்கையூர் காவல் நிலைய போலிசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.

000

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *