ஆகஸ்டு,29-
கிராபிக்ஸ் எனப்படும் மாயாஜாலத்தை தமிழில் அறிமுகம் செய்தவர் இயக்குநர் ஷங்கர். தனது முதல் படமான ஜென் டில்மேன் மற்றும் இரண்டாம் படமான காதலன் படத்தில்அவர் கிராபிக்சை பயன்படுத்தவில்லை.இந்தியன் படத்தின் ‘மாய மஞ்சீந்திரா’ படத்தில் முதன் முறையாக கிராபிக்ஸ் காட்சிகள் இடமபெற்றது.அதன் பிறகு அவரது ஒவ்வொருபடத்திலும் கிராபிக்ஸ் காட்சிகள் உண்டு.கிராபிக்ஸ் காட்சிகளால் படங்கள் ஒரு புதிய பரிமானத்தை எட்டுகிறது. இதனால் பெரிய பட்ஜெட் படங்களில் கிராபிக்ஸ் காட்சிகள் தவிர்க்க இயலாத அம்சாகி விட்டது.
கமல்ஹாசன் வில்லனாக நடிக்கும் ,புதிய படத்தின் கிராபிக்ஸ் குறித்து வியப்பூட்டும் செய்திகள் வெளியாகியுள்ளது. . : பிரபாசுக்கு வில்லனாக கமல் நடிக்கும் ‘கல்கி ’ படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு மட்டும் 200 கோடி ரூபாயை படக்குழு செலவிட இருப்பதாக தகவல்.. நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் சயின்ஸ் பிக்ஷன் படம், ‘கல்கி. வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் அமிதாப்பச்சன், தீபிகாபடுகோன், திஷா பதானி, பசுபதி உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.
10 மொழிகளில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் முதல் தோற்றம் அண்மையில் வெளியிடப்பட்டது. இந்த அறிவியல் படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் முக்கிய
அங்கமாக இருப்பதால் கிராபிக்ஸுக்கு காட்சிகளுக்கு மட்டும் 200 கோடி ரூபாயை இறைக்க படக்குழு முடிவு செய்துள்ளது. இந்திய சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத தரத்துடன் இந்தப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் இருக்க வேண்டும் என்பதில் படக்குழு தீர்மானமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
படத்தின் மொத்த பட்ஜெட் . 600 கோடி ரூபாய். கமலுக்கு சம்பளம் 150 கோடி ரூபாய். ’ஓடி ஓடி உழைக்கணும்’ என பாடினார், எம்.ஜி.ஆர்.;கோடி
கோடி குவிக்கணும்’ என ஓடிக்கொண்டிருக்கிறார், கமல்.
000