ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள
‘இந்தியன் -3 ‘படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல்
ஏற்பட்டுள்ளது..
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில்
கமல்ஹாசன் நடித்த இந்தியன் படம் கடந்த
1996-ம் ஆண்டு ரிலீஸ் ஆனது.
மாபெரும் வெற்றி பெற்றது.
அந்தப்படத்தின் வெற்றியை தொடர்ந்து
சுமார் 28 ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசனை வைத்து இரண்டாம் பாகத்தை உருவாக்கினார், ஷங்கர். படத்தை முடிக்க ஐந்தாறு ஆண்டுகள்
ஆயிற்று.
‘இந்தியன் 2’ திரைப்படம் கடந்த ஆண்டு
மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆனது.
படம் ஓடவில்லை.
இந்தியன் 2 படத்தால் அதனை தயாரித்த
லைகா நிறுவனம் மிகப்பெரிய நஷ்டத்தை
சந்தித்தது.
இந்தியன் 2 படப்பிடிப்பின் போதே அதன் மூன்றாம் பாகத்திற்கான பெரும்பாலான ஷூட்டிங்கையும் நடத்தி முடித்துவிட்டார் ஷங்கர்.
ஒரு பாடல் காட்சி மட்டுமே எஞ்சி உள்ளது. அதை எடுத்துவிட்டால் இந்தியன் 3 படமும் ரிலீசுக்கு தயாராகிவிடும்.அந்த ஒரு பாடல் காட்சியை எடுக்க
20 கோடிக்கு மேல் செலவு
ஆகும் என ஷங்கர் சொல்லி உள்ளார்.
. அடுத்தடுத்த தோல்விகளால் நிதி நெருக்கடியில்
சிக்கியுள்ள லைகா நிறுவனம், தங்களுக்கு
இந்தியன் 3 படமே வேண்டாம் என சொல்லி அப்படத்தில் இருந்து விலகிவிட்டது.
இதனால் இந்தியன் 3 படம் கிடப்பில் போடப்பட்டு விட்டது.
—