சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில், அவருக்கு நினைவிடம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
நினைவிடத்தின் பின்புறம் வங்கக்கடலில் பேனா வடிவில் கருணாநிதிக்கு நினைவு சின்னம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்தது.
கடற்கரையில் இருந்து 748 மீட்டர் தூரம் பாலம் அமைத்து, 134 அடி உயரத்தில், 81 ரூபாய்கோடி மதிப்பில் நினைவு சின்னம் அமைக்க முடிவெடுத்து, தமிழக கடலோர மேலாண்மை ஆணையத்தின் அனுமதியை பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின்கீழ் உள்ள கடலோர மண்டல ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதியை கோரியது. நினைவு சின்னம் அமைக்க பல நிபந்தனைகளுடன் மத்திய ஆணையம் அனுமதி வழங்கியது.
அடுத்தகட்ட பணிகளை பொதுப்பணி துறை சுறுசுறுப்பாக தொடங்கியது. நினைவிடத்தில் பணிகள் நடப்பதை முதல்-அமைச்சர் ஸ்டாலின் இரண்டு முறை பார்வையிட்டு ஆலோசனை நடத்தினார்.
சில அமைப்புகள், அரசியல் கட்சிகள் கடலில் நினைவு சின்னம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தன.பேனாவை உடைப்பேன் என நாம் தமிழர் சீமான் ஆவேசம் காட்டினார். இந்த நிலையில் கடலில் பேனா சின்னம் அமைக்கும் முடிவை ஸ்டாலின் மாற்றி கொண்டுள்ளதாக தெரிகிறது,
கருணாநிதி நினைவிடத்திலேயே சிறிய அளவில் பேனா சின்னம் அமைக்க அவர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்குப் பிறகே நினைவுச் சின்னம் அமைக்கும் பணி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
000