சென்னை. ஜுன்,-20
திருமணம் மற்றும் விருந்து மண்டபங்கள் போன்ற வணிக இடங்களில் மதுவை வைத்திருக்க அனுமதி உண்டா இல்லையா என்பதை சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் நாடு அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசின் மதுபான உரிமம் மற்றும் அனுமதிப்பதற்காக கடந்த 1981 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட விதிகளில் கடந்த மார்ச் 18 ஆம் தேதி தமிழ்நாடு அரசு சில திருத்தங்களை செய்தது. அன்று செய்யப்பட்ட திருத்தம், திருமணம் மற்றும் விருந்து மண்டபங்கள் போன்ற வணிக இடங்களில் மதுவை வைத்திருக்க அனுமதிக்காது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
மதுபாக திருத்த விதிகளுக்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் கே. பாலு தாக்கல் செய்து உள்ள வழக்கிற்கு தமிழ்நாடு அரசு பதில் அளித்து உள்ளளது. அதில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையர் டி.ரத்னா, “தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் நடைபெறும் மாநாட்டு அரங்குகள் அல்லது மாநாட்டு மையங்களில் சர்வதேச விருந்தினர்களுள் மதுபானங்களை வைத்திருப்பதற்கான உரிமங்களை வழங்குவதற்கு மட்டுமே இந்தத் திருத்தம் வழி வகுக்கும்” என்று தெரிவித்து உள்ளார். அதே வேளையில் கல்வி நிறுவனங்களுக்குள் இருக்கும் மாநாட்டு அரங்குகளில் இத்தகைய நடைமுறைக்கு அனுமதி இலலை என்றும் அவா் விளக்கம் தந்து இருக்கிறார்.
அட்வகேட் ஜெனரல் ஆர்.சுண்முகசுந்தரம் மூலம் தாக்கல் செய்யப்பட்டு உள்ள இந்த பதில் மனுவில் , மாநாட்டு அரங்குகள் மற்றும் மாநாட்டு மையங்களில் மதுபானம் வைத்திருப்பதற்கும் பரிமாறுவதற்குமான சிறப்பு உரிமம் துணை ஆணையர் அல்லது கலால் உதவி ஆணையரின் முன் அனுமதியுடன் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உரிமம் பெற்றவர்கள், மாநகராட்சி எல்லைக்குள் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு காவல் ஆணையரிடமும், மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு காவல் கண்காணிப்பாளரிடமும் தடையில்லாச் சான்றிதழைப் (NOC) பெற வேண்டும். அதன்பிறகு, உரிமம் பெற்றவர்கள் அருகிலுள்ள டாஸ்மாக் மொத்த விற்பனைக் கிடங்கில் இருந்து மது பாட்டில்களளைப் பெற முடியும்.
இந்த தடையில்லாச் சான்றிதழை வழங்குவதற்கு முன்பு சட்டம் ஒழுங்கு நிலைமையை போலீசார் கருத்தில் கொள்வார்கள் என்று பதலி மனுவில் தெரிவித்துள்ள ரத்னா, சர்வதேச மாநாடுகள் அல்லது உச்சிமாநாடுகளின் போது கூட, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத இடத்தில் மட்டுமே மதுபானம் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படும் என்றும் கூறியிருக்கிறார்..
தலைமை நீதிபதி தலைமையிலான முதல் டிவிஷன் பெஞ்ச் முன் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. வழக்கின் விசாரணையை ஜூலை 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அதுவரை சட்டத் திருத்தத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டு உள்ளனர்.
வழக்கறிஞர் கே.பாலு மனுவில் குறிப்பிட்டு உள்ள மற்ற புகார்களுக்கு திருமதி ரத்னா தமது பதில் மனுவில் மறப்பு தெரிவித்து உள்ளார். கடந்த 2004 ஆம் ஆண்டு மார்ச் 31, ஆம் தேதி நிலவரப்படி தமிழ்நாட்டில் 7,896 சில்லறை மதுபானக் கடைகள் இருந்தன, ஆனால் அவை இந்த 2023 மார்ச் 31, நிலவரப்படி 5,329 கடைகளாகக் குறைந்து உள்ளன. 2023-24 ஆம் ஆண்டில் மேலும் 500 கடைகளை மூடுவதற்கான அறிவிப்பு ஏப்ரல் 12 ஆம் தேதி சட்டமன்றத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. “எனவே, டாஸ்மாக் நிறுவனம் அதிக கடைகளைத் திறப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டுவதாக மனுதாரர் தெரிவித்து உள்ள குற்றச்சாட்டு முற்றிலும் ஆதாரமற்றது ” என்றும் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.
டாஸ்மாக் நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள விவரங்கள் படி திருமண வீடுகள் மற்றும் திருமண மண்டபங்களில் பத்துப் பதினைந்து பேர் கும்பலாக கூடிக் கொண்டு மதுபானம் அருந்த அனுமதி இல்லை என்பதை உணரவேண்டும். மீறி நடைபெறும் கொண்டாட்டங்கள் பற்றி தகவல் கிடைத்தால் போலிஸ் வந்து அனைவரையும் அள்ளிச் சென்று விடும்.
000க