தெலுங்கு தேச சினிமா உலகின் பிரமாண்ட இயக்குநரான ராஜமவுலி,கடைசியாக ஆர் ஆர் ஆர் படத்தை டைரக்டு செய்திருந்தார்.அந்தப் படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
அடுத்து தெலுங்கு ‘சூப்பர் ஸ்டார்’ மகேஷ்பாபு நடிக்கும் படத்தை ராஜமவுலி இயக்குகிறார்.இந்தப்படத்தில் பிரியங்கா சோப்ரா வில்லி கேரக்டரில் நடிக்கிறார்..
இந்த ‘பான் இந்தியா’ படத்துக்கு தலைப்பு வைக்கவில்லை. ரூ.500 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகிறது.
தற்போது ஒடிசாவில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படத்துக்காக ஐதராபாத்தில் உள்ள அலுமினியம் பேக்டரி வளாகத்தில் காசி நகரை போன்று அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
ஒடிசாவிலிருந்து படக்குழு திரும்பியதும் இந்த ‘செட்’ டில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இந்த அரங்கில் 600 துணை நடிகர்கள் பங்கேற்கும் முக்கிய காட்சி படம் ஆக்கப்படுகிறது.
இந்த காசி செட்டை படக்குழு ரகசியமாக வைத்திருந்தனர். சிலர் இந்த அரங்கினை புகைப்படம் எடுத்து இணையதளத்தில் பரப்பிவிட்டுள்ளனர்.
இதனால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.
—