காதல் வலையில் மீண்டும் விழுந்தார் சமந்தா.

தமிழ் சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வந்தவர் சமந்தா. விஜய், விக்ரம், சூர்யா போன்ற நடிகர்களுடன் ஜோடியாக நடித்த சமந்தா தெலுங்கு சினிமாவுக்கும் சென்றார்.

‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவுடன் ஜோடியாக நடித்தார்.

அப்போது நாக சைதன்யா – சமந்தா இடையே காதல் மலர்ந்தது. தெலுங்கிலும் முன்னணி நடிகையாக உலா வந்த நேரத்தில் நாக சைதன்யாவை கல்யாணம் செய்து கொண்டார் .
இரு வீட்டு பெற்றோர் சம்மதத்துடன் இந்த திருமணம் சிறப்பாக நடைபெற்றது.

காதல் திருமணம் செய்து கொண்ட நட்சத்திர ஜோடிகள், பொறாமைப்படும் அளவுக்கு நாக சைதன்யா – சமந்தா ஜோடியின் திருமண வாழ்க்கை சீராக சென்று கொண்டிருந்தது.

திடீரென இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2022 ஆம் ஆண்டு பிரிந்தனர்.

‘புஷ்பா’ படத்தில் “ஊ சொல்றியா மாமா” பாடலுக்கு சமந்தா ஆடிய நடனம் அவரை வேறு ஒரு தளத்துக்கு கொண்டு சென்றது.

கல்யாண பந்தம் அறுபட்ட சூழலில், சோதனை மேல் சோதனையாக, ‘மையோசிடிஸ்’ என்ற தசை நோயால் சமந்தா பாதிக்கப்பட்டார்.
நோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொண்டே வெப் சீரிஸ் மற்றும் படங்களில் நடித்து வந்தார்.

‘தி பேமிலி மேன் 2’, ‘சிட்டாடல்: ஹனி பனி’ போன்ற தொடர்களில் தன்னுடன் பணியாற்றிய இயக்குநர் ராஜ் , நிடிமோருடன் , சமந்தா ‘டேட்டிங் ‘செய்வதாக செய்திகள் உலா வந்தன.
அந்த செய்திகளுக்கு வலு சேர்க்கும் விதமாக ஒரு புதிய தகவல் .

காதலர் ராஜ் நிடிமோருவுடன் சமந்தா நிச்சயதார்த்தம் செய்து கொண்டார் என்பதே அந்த தகவல்இதனை உறுதிப்படுத்தும் விதமாக சமந்தா, தனது கை விரலில் வைர மோதிரம் மாட்டியுள்ளார்.
நிச்சயதார்த்தத்தின் போது , அதனை காதலர் மாட்டினார் என்ற செய்தி வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ராஜ் நிடிமோரு ஏற்கனவே திருமணமானவர். தனது மனைவியை பிரிந்து வாழ்கிறார்.
ரெண்டாம் கல்யாணத்துக்கு சமந்தா ரெடி ஆகி விட்டார்.

எங்கே ? எப்போது ? என்ற கேள்விகளுக்கு சமந்தா தான் பதில், சொல்ல வேண்டும்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *