ஜுலை,29-
கிருஷ்ணகிரி அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட விபத்தில் 9 பேர் உயிரிழந்தனா்.
பழைய பேட்டை என்ற இடத்தில் இருந்த குடோனில் ஏராளமான அளவு பட்டாசு இருப்பு வைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த பட்டாசுகள் இன்று காலை திடீரென வெடித்துச் சிதறியது. குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் குடோன் இருந்ததால் அருகில் இருந்து வீடுகளும் இடிந்து தரைமட்டமானது. காவல் துறையினரும் தீ அணைப்புத் துறையினரும் சம்பவ இடத்தில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
பிற்பகல் வரை இறப்பு எண்ணிக்கை 9 ஆக இருந்தது. காயம் அடைந்த 10 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் சிலரின் உடல்நிலை கவலைக் கிடமாக உள்ளது.
விபத்து நடைபெற்ற இடத்தை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.அவர்,முழுமையான விசாரணைக்குப் பிறகே விபத்துக்கான காரணம் தெரியவரும் என்று கூறியுள்ளார்.
இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ 3 லட்சமும் காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ 1 லட்சமும் லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ 50 ஆயிரமும் நிவாரணமும் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்து உள்ளது.
குடியிருப்புப் பகுதியில் பட்டாசு குடோன் செயலபடுவதைக் கண்டுகொள்ளாமல் இருந்த அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.
000