ஜனவரி-20,
கசாயத்தில் விஷத்தைக் கலந்து கொடுத்து மாணவனைக் கொன்ற காதலிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. 23 வயது இளம் பெண்ணுக்கு தூக்கு தண்டனை கொடுக்கப்பட்டு இருப்பது பெரும் பரப்பரை ஏற்படுத்தி இருக்கிறது.
மரணத் தண்டனைக்கு ஆளாகி இருக்கும் கிரிஷ்மாவுக்கு வயது 23 தான். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையைச் சேர்ந்த கிரிஷ்மா கேரளா மாநிலம் பாறசாலையை சேர்ந்த ஷாரோன் ராஜி என்பவை காதலித்து உள்ளார். இவர் குமரி மாவட்டத்தல் உள்ள கல்லூரி ஒன்றில் படித்த போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் ஒன்றாகச் சேர்ந்து ஊர்களைச் சுற்றி காதலை வளர்த்து உள்ளனர்.
ஒரு கட்டத்தில் ராணுவத்தில் உள்ள ஒருவரை திருமணம் செய்து கொள்ளுமாறு உறவினர்கள் சொன்னதால் கிரிஷ்மா, ஷாரோனை விட்டு பிரிய முயன்று உள்ளார். இதனை ஷாரோன் ஏற்றுக் கொள்ளவி்ல்லை.
கடந்த 2022- ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் காதலனை வீட்டுக்கு அழைத்த கிரிஷ்மா, அவருக்கு விஷம் கலந்த கசாயத்தைக் கொடுத்து உள்ளார். பின்னர் உடல் நலம் பாதிக்கப்பட்ட ஷாரோன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவருடைய திடீர் மரணம் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கேரள மாநில போலீசார் விசாரணைக்குப் பின் கிரிஷ்மோ, அவருடைய தாயார், தாய் மாமன் நிர்மல் குமார் ஆகியோரை கைது செய்தனர.
இந்த வழக்கில ஜாமீன் கூட கிடைக்காமல் கிரிஷ்மோ ஒரு வருட காலம் சிறையில் இருக்க நேரிட்டது, வழக்கை விசாரித்து கேரள மாநிலத்தின் நெய்யாற்றின் கரை கூடுதல் செசன்ஸ் நீதிமன்றம் வெள்கிக் கிழமை கிரிஷ்மாவையும் அவருடைய மாமா நிர்மல் குமாரையும் குற்றவாளி என்று தீர்ப்பளித்து இருந்தது. போதிய ஆதராம் இல்லை என்று கூறி அவருடைய தாயார் விடுவிக்கப்ட்டார்.
தண்டனை விவரத்தை இன்று ( திங்கள் கிழமை) அறிவித்த நீதிமன்றம் கிரிஷ்மாவுக்கு தூக்குத் தண்டனையும் நிர்மல் குமாருக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் அளித்து உத்தரவிட்டது,
தீர்ப்புக் கூறப்படுவதை ஒட்டி நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்த இருவரும் உடனடியாக கைது செய்து திருவனந்தபுரம் மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர்.
ஷாரோன் கொலை, இரண்டு மாநிலங்களிலும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்காகும். தண்டனை விவரத்தை அறிவதற்கு நீதிமன்றம் முன் ஏராளமானவர்கள் கூடியிருந்தனர்.
*