சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த ஒன்றரை வயது குழந்தையின் கை எடுக்கப்பட்டதற்கு மருத்துவர்களின் தவறான சிகிச்சை காரணமில்லை என்று விசாரணை நடத்திய மருத்துவர்கள் குழு தெரிவித்து உள்ளது.
Pseudomonas கிருமியினால் ஏற்படும் மூளைத்தொற்று ரத்தநாளத்தைப் பாதித்ததால் கையில் இரத்த ஓட்டம் பாதிப்பு ஏற்பட்டது. இதனாலோய கையை எடுக்க வேண்டிய நிலை உருவானதாகவும் அவர்கள் விளக்கம் அளித்து உள்ளனர்.
விசாரணைக் குழுவின் விளக்கத்தை ஏற்க குழந்தையின் பெற்றோர் மறுத்து விட்டனர் அதன் தாயார் அஜிசா செய்தியாளகளிடம் கூறியதாவது..
“எங்கள் குழந்தையின் கை அகற்றப்பட்டதற்கு காரணமான அனைவரையும் விசரிப்பதாக கூறினார்கள். ஆனால் வார்டில் எங்களுடன் தங்கி இருந்தவர்களை விசாரிக்கவில்லை. நாங்கள் தவறான சிகிச்சையினால் குழந்தையின் கையை அகற்ற நேரிடடது என்று சொல் ஆரம்பித்த பிறகுதான் குழந்தைக்கு இருதய பிரச்சனை இருக்கிறது என்று சொல்கிறார்கள். அதற்கு முன்பு குழந்தைக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்று மருத்துவர்கள் கூறியிருந்தார்கள்.
கடந்த 29- ஆம் தேதி வியாழக் கிழமை அன்று குழந்தை கை சிகப்பாக மாறியதை மருத்துவர் இல்லை என்பதால் செவிலியர்களிடம் தெரிவி்த்தேன். இதனை செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் உட்பட அனைவரும் மறுத்து சனிக்கிழமை அன்று தான் கை சிவந்ததாக கூறினார்கள். ஆனால் இன்று வெளியான விசாரணைக் குழு அறிக்கையில் 29 – ஆம் தேதி வியாழன் அன்று கை சிவந்ததாக குறிப்பிட்டுள்ளார்கள். இதிலிருந்து உண்மை என்ன என்று உங்களுக்குத் தெரியும்.
அப்பட்டமாக பொய் பேசுகிறார்கள். இதே போன்று மற்றவர்களின் குழந்தைகளுக்கு ஏற்படாது என்பது என்ன நிச்சயம்? அடுத்த நடவடிக்கையாக டீனை சந்தித்து எங்கள் மகனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை மற்றும் விசாரணை அறிக்கை குறித்து விளக்கம் கேட்க இருக்கிறோம். என் குழந்தைக்கு நீதி கிடைக்க வேண்டும். மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் இது ஒரு பாடமாக இருக்க வேண்டும். நான் செய்வதை எல்லாம் பணத்திற்காக செய்வதாக சொல்கிறார்கள். எனக்கு நீதி கிடைத்தால் போதும்”.
இவ்வாறு தாயார்அஜிசா கூறினார்.
இந்த பேட்டிக்கு மறுப்பு தெரிவித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், ராஜீவ் காந்தி மருத்துவனை முதல்வர் ஆகியோர் விளக்கம் அளித்து உள்ளனர்.
பிரச்சினை முடிவில்லாமல் நீண்டு கொண்டே போகிறது.
000