ஏப்ரல்.23
கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு எடுக்கப்படும் நிலத்தின் உரிமையை முழுவதுமாக மத்திய அரசுக்கு மாற்றப்படாது என்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தமது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாடு அரசு இந்திய விமான நிலைய ஆணையம் மற்றும் மத்திய அரசாங்கத்திற்கு தேவையான நிலத்தை குத்தகைக்கு மட்டுமே வழங்கும். முன்பு போல உரிமையை மத்திய அரசுக்கு மாற்றாது. விமான நிலையம் இந்திய விமான நிலைய ஆணையத்தால் இயக்கப்படும் வரை குத்தகைத் தொகை குறைந்தபட்ச டோக்கன் மதிப்பில் வைக்கப்படும் என்ற ஷரத்து குத்தகையில் அடங்கும்.
விமான நிலையத்தை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவெடுத்தால், தமிழகத்திற்கான குத்தகை தொகையானது நிலத்தின் அப்போதைய சந்தை மதிப்பைப் பிரதிபலிக்கும் அல்லது விமான நிலையத்தில் அப்போதைய சமமான பங்குகளை தமிழக அரசுக்கு வழங்க வேண்டும். மாநில அரசின் அனுமதியின்றி (டோக்கன் மதிப்பு மற்றும் குத்தகைக் கட்டணத்தில்) நிலத்தை ஒரு தனியார் ஆபரேட்டருக்கு (சலுகை குத்தகை வாடகையில்) துணை குத்தகைக்கு வழங்க அவர்களுக்கு உரிமை இருக்க வேண்டும் என்ற இந்திய விமான நிலைய ஆணையத்தின் பரிந்துரையை தமிழ்நாடு நிராகரித்து விட்டது.
இவ்வாறு டிவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.