ஏப்ரல்.27
கோவையிலிருந்து விமானம் மூலம் டெல்லி சென்ற முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சேலத்து மாம்பழங்களையும் உடன் எடுத்துச்சென்றார்.
கோவையிலிருந்து விமானம் மூலம் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி நேற்று டெல்லி கிளம்பினார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் தங்கமணி ஆகியோரும் சென்றனர். அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின் முதல்முறையாக எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்றார். இதையொட்டி, கோவை விமான நிலையத்திற்கு வந்த ஈபிஎஸ்-க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
டெல்லிக்கு புறப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து பேசுகிறார். இதனைத் தொடர்ந்து டெல்லியில் முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்களை சந்திக்கவும் அவர் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், விமானம் மூலம் டெல்லி செல்வதற்காக கோவை வந்த எடப்பாடி பழனிச்சாமி, சேலத்தின் அடையாளமாக விளங்கும் மாம்பழங்களையும் உடன் எடுத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.