ஜனவரி -02,
தமிழ்நாட்டில் 2026- ஆம் ஆண்டில நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றுவது தான் தவெக கட்சியின் இலக்கு என்று விஜய் தெரிவித்து உள்ளார்,
தமிழக வெற்றிக் கழகம் இரண்டாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.
இந்த நாளை முன்னிட்டு விஜய் தன்னுடைய கட்சியின் தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் …
என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு. வணக்கம். இதயம் மகிழும் தருணத்தில், உங்களோடு பேசவே இக்கடிதம்.
இன்று. ஒரு வெற்றிப் பெரும்படையின் இரண்டாம் ஆண்டு தொடக்கம். ஆம், தமிழக வெற்றிக் கழம் என்னும் அரசியல் பெரும்படையைக் கட்டமைத்தது பற்றிய அறிவிப்பை வெளியிட்டு.
இந்த ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதியோடு ஓராண்டு நிறைவுறுகிறது. மக்கள் இயக்கமாக, மக்களுக்கான நலத்திட்டங்களைச் செய்து வந்த நாம். அரசியல் களத்தைக் கையாளத் தொடங்கி, இதோ இப்போது இரண்டாம் வருடத்தில் இருக்கும் நாம் உறுப்பினர் சேர்ககை என ஒவ்வொரு அடியாக நிதானமாக முன்னேறி வருகிறோம்.
மக்களுக்கான அரசியலை, மக்களோடு மக்களாக நிற்பதை, மக்களுடன் நின்றே அறிவித்தோம். அதுதான் நமது முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கைத் திருவிழாவானது. அதில்தான். கழகத்தின் ஐம்பெரும் கொள்கைத் தலைவர்களை, மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கைகளை, மாபெரும் செயல்திட்டங்களை அறிவித்தோம்.
அதன் வாயிலாக, அரசியல் களத்தின் அத்தனை திசைகளையும் அதிர வைத்தோம். இதோ. இந்த ஓராண்டுக்குள் எத்தனை எதிர்ப்புகளை, ஏகடியங்களைக் கடந்திருப்போம்? எதற்கும் அஞ்சாமல், எதைக் கண்டும் பதறாமல் நம் கருத்திலும் கருத்தியலிலும் நின்று. நிதானித்து, நேர்மையாக நடைபோட்டு வருகிறோம்.
1967-இல் தமிழக அரசியலில் ஆகப்பெரும் அதிர்வுடன் ஒருபெரும் மாற்றம் தொடங்கியது. அதன் பின்னர், 1977இல் மீண்டும் ஓர் அரசியல் அதிர்வு ஏற்பட்டது.
மக்கள் சக்தியின் மாபெரும் வலிமை நிரூபிக்கப்பட்டது. இவ்விரண்டு தேர்தல் அரசியல் முடிவுகளிலும்தான். அப்போது இருந்தோரின் பெரும் உழைப்பே இந்தப் பெருவெற்றிகளுக்கான அடிப்படைக் காரணமாகும். அத்தகைய ஓர் அரசியல் பெருவெளிச்சத்தைக் கொண்ட ஒரு புதிய அரசியல் அதிகாரப் பாதையை 2026 தேர்தலில் நாம் உருவாக்கிக் காட்டுவோம். நம்மோடு இணைந்து மக்களும் மனத்தளவில் அதற்குத் தயாராகி வருகின்றனர்.
தோழர்களே. தமிழக மண்ணைச் சேர்ந்த இந்த மகன் உங்களோடு நிற்கிறேன். நாம், நமது மக்களோடு சேர்ந்து களத்தில் நிற்போம்
மாபெரும் அரசியல் மாற்றத்தை நிகழ்த்துவோம். இரட்டைப் போர் யானைகள் பலத்தோடு எதிரிகளை வெல்வோம். வாகைப் பூ மாலை சூடுவோம். வெற்றி நிச்சயம். . என்று கடிதத்தில் குறிப்பிட்டுளள் அவர் அன்புடன். விஜய்’ என்று கடிதத்தை முடித்து உள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலை முழு வீச்சில் எதிர்கொளவ்தற்கு விஜய் தயாராவதை அவருடைய அறிக்கை வெளிப்படுத்துகிறது.
*