சட்டம் ஒழுங்கு பிரச்சினை..மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை.

சொகுசாக உட்கார்ந்துகொண்டு வன்மங்களை விதைப்பவர்களால் அப்பாவிகள் பாதிக்கப்படுகிறார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டம் ஒழுங்கு தொடர்பாக சென்னையில் காவல்துறை அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை இல்லை என்று கூறிய அவர் சட்டம் ஒழுங்கிற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தால் தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக திகழ்கிறது என்றார்.நிம்மதியாக உள்ள நாட்டில் தான் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த முடியும் என்றும் முதலமைச்சசர் கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது..

“சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை தொடக்கத்திலேயே கண்டறிந்து களைய வேண்டும். நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது, சட்டம் ஒழுங்கை சிறப்பாக வைத்திருக்க வேண்டும். கள்ளச்சாரய தடுப்புப் பற்றி வாரம் தோறும் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட வேண்டும்..

பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் மீது விருப்பு வெறுப்பு என்ற பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.போதைப் பொருட்கள் என்பது தனி நபர் சார்ந்த பிரச்சினை அல்ல, சமூகத்தின் பிரச்சனை. இதுதான் கொலை கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களுக்கு காரணமாக இருக்கிறது.

கடந்த மாதங்களை விட குற்றம் குறைந்து இருக்கிறது என்ற புள்ளி விவரங்கள் வேண்டாம் குற்றமே இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும்  சொகுசாக உட்கார்ந்து கொண்டு சமூக வலைதளங்கள் மூலமாக வன்மங்களை பரப்பி வருகின்றனர் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சட்டம் ஒழுங்கு பிரச்சனை கண்டறியப்பட்டால் ஆரம்பத்திலேயே அதனை கட்டுப்படுத்த வேண்டும். காவல் நிலையங்களுக்கு விசாரணைக்காக அழைத்து வருபவர்களை துன்புறுத்தக் கூடாது.குற்றங்கள் குறைவு என்ற எண்ணிக்கையை விட குற்றங்களே நடைபெறவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்”. இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

அனைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள்,டி.ஐ.ஜி, மற்றும் ஐ.ஜி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் ஆலோசனையில் பங்கேற்றனர்.

000

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *