நீலகிரி மாவட்டத்தில் ஊட்டச்சத்து மாத்திரைகை சாப்பிட்டு மாணவி உயிரிழந்த விவகாரத்தில் அஜாக்கிரதையாக செயல்பட்ட சுகாதார ஊழியர் பணியிடை நீக்கம்.
ஊட்டி அருகே அளவுக்கு அதிகமாக இரும்பு சத்துமாத்திரைகளை சாப்பிட்ட பள்ளி குழந்தைகள் நான்கு பேர் வாந்தி எடுத்து மயக்கமுற்றனர். இவர்களில் மாணவி ஒருவர் உயிரிழந்ததால் பிரச்சினை பெரிதாக வெடித்து உள்ளது
தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு உடல் ஆரோக்கியத்தை பேணிக் காக்கும் வகையில் இரும்பு சத்து மாத்திரைகள் வியாழக்கிழமை தோறும் வழங்கப்படுகிறது.உதக மண்டலம் அருகே சம்பந்தப்பட்ட உருது பள்ளி மாணவிகளுக்கு தலா ஒரு மாத்திரைக்கு தருவதற்குப் பதிலாக மாத்திரை அட்டைகளை ஆசிரியர் வழங்கியதுதான் பிரச்சினைக்கு காரணமாகும்.
கடந்த வார வியாழன் கிழமை கொடுக்க வேண்டிய மாத்திரையை திங்கட்கிழமை அஜாக்கிரதையாக சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் கொடுத்துள்ளனர்
எனவே பள்ளி தலைமை ஆசிரியர், மாத்திரை கொடுத்த ஆசிரியர் கலை பகுதி செவிலியர், மற்றும் கிராம செவிலியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்