அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான மனுக்கள் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது அவரிடம் விசாரணை நடத்துவதற்கு புதிய அனுமதியைத் தர வேண்டும் என்று அமலாக்கத்துறை தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் வசூலித்த வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி நீதிமன்ற அனுமதியின் பேரில் சென்னை காவேரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதே கால கட்டத்தில் அவரிடம் மருத்துவனையில் வைத்து 8 நாட்கள் விசாரணை நடத்துவதற்கும் நீதிமன்றம் அனுமதி கொடுத்திருந்தது. ஆனால் செந்தில் பாலாஜி மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதால் அவரிடம் அமலாக்கத் துறை விசாரணையை தொடங்கவில்லை,
இந்த நியைில் அவர் கைது செய்யப்பட்ட போது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரணைக்கு உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது சரியல்ல என்றும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதிக் கொடுத்தது தவறு என்றும் அமலாக்கத் துறை தாக்கல் செய்திருந்த மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது செந்தில் பாலாஜி சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டு உள்ளதால் ஆட்க்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது செல்லும் என்று அவருடைய தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதிட்டார்.
மேலும் ஒருவரை கைது செய்த முதல் 15 நாட்களுக்குள் தான் அவரை காவலில் எடுத்து விசாரிக்க முடியும். எனவே கைது செய்யப்பட்டதில் இருந்து 15 நாட்கள் கழித்து காவலில் எடுத்து விசாரிக்க முடியாது. அது மட்டுமல்ல கைது செய்யப்படுகிறவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த காவல்துறை போன்ற அமைப்புகளுக்கு அதிகாரம் உள்ளது போல அமலாக்கத் துறைக்கு அதிகாரம் இல்லை. எனவே செந்தில் பாலாஜியைய காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைன்கு அனுமதி கொடுத்தது செல்லாது என்ற வாதத்தையும் என்.ஆர்.இ்ளங்கோ முன் வைத்தார்.
இவற்றுக்கு அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞரும் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலுமான துஷார் மேத்தா கடுமையான எதிர்ப்பதை தெரிவித்தார். மேலும் அவர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருந்ததால் அவரிடம் விசாரிக்க முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளதால் விசாரணை நடத்துவதற்கு புதிய அனுமதி கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
வாதங்கள் முடிவடையாததால் விசாரணை செவ்வாய்க் கிழமைக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
இந்த வழக்கின் வாதப் பிரதி வாதங்கள் உணர்த்துவது என்னவென்றால் காவேரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை முடிந்த பிறகு அவரிடம் விசாரணை நடத்துவதற்கு அமலாக்கத் துறைக்கு அனுமதிக் கிடைக்குமா இல்லையா என்பதுதான்.
இந்தக் கேள்விக்கு அடுத்த செவ்வாய் கிழமை விடை கிடைக்கலாம்.
000
000