சென்னை அருகே புதிய ரயில் நிலையம்.

ஆகஸ்டு,18-

சென்னை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைப்பதற்கு தெற்கு ரயில்வே ஒப்புதல் வழங்கி உள்ளது.

சென்னை புறநகர் பகுதியான கிளாம்பாக்கத்தில் 60 ஏக்கர் பரப்பளவில் ரூ 395 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்து  முனையத்திற்கு நகருக்குள் இருந்து எளிதில் சென்று வருவதற்கு வசதியாக  தாம்பரம் – செங்கல்பட்டு ரயில் தடத்தில் கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என்று சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தெற்கு ரயில்வேயிடம் வலியுறுத்தி இருந்தது.

இதற்கான செலவான ரூ 20 கோடியை வழங்குவதாகவும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தெரிவித்து இருந்தது.  இதையடுத்து புதிய ரயில் நிலையம் கட்டும் திட்டத்திற்கு தெற்கு ரயில்வே நிர்வாக ரீதியாக அனுமதி வழங்கியுள்ளது.

இதையடுத்து மூன்று நடைமேடைகளுடன் கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தைக் கட்டுவதற்கான  வரைபடம் தயாரிப்பது உள்ளிட்டப் பூர்வாங்க பணிகளை மேற்கொள்ள ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது நான்கு மாதங்களில் கட்டுமான பணிகளை தொடங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டு இருப்பதாகவும் தெற்கு ரயில்வே வட்டாரம் தெரிவித்து இருக்கிறது.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *