5 பேர் உயிரிழப்பு – அமைச்சர் விளக்கம்.
குளத்தை தூர்வாராமல் தீர்த்தவாரி நடைபெற்றது குறித்து முதல்வர் தம்மைக் கண்டித்ததாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளளார். சென்னையின் புறநகராக மூவரசன் பேட்டை குளத்தில் புதன் கிழமை நடைபெற்ற தீர்த்தவாரியின் போது ஐந்து பேர் இறந்தது குறித்து சட்டசபையில் கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு அளித்த பதிலில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.தீர்த்தவாரி நடைபெற்ற குளம் கோயில் குளம் அல்ல, பஞ்சாயத்தால் நிர்வகிக்கப்படும் குளம் என்றும் சேகர் பாபு தெரிவித்தார். இந்த கோயிலில் கடந்த 4 ஆண்டுகளாக தீர்த்தவாரி நடைபெற்று வருவதாகக் கூறிய அமைச்சர் தீர்த்தவாரி குறித்து அறநிலையத்துறைக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்றும் சொன்னார்.