‘இளையதளபதி’விஜய்யின் ‘ஜன நாயகன்’
திரைப்படத்தின் ஓடிடி உரிமை ரூ.120 கோடிக்கு
விலை போய் இருக்கிறது.
‘தமிழக வெற்றிக்கழகம் ‘எனும் அரசியல்கட்சியை தொடங்கியுள்ள விஜய் நடிக்கும்கடைசி படம் ‘ஜன நாயகன்’
கே.வி.என் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை
ஹெச்.வினோத் இயக்குகிறார்.விஜய் தவிர பாபி தியோல், கவுதம் மேனன், பிரியாமணி, பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். அனிருத் இசை அமைக்கிறார்.
‘ஜன நாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையை
கைப்பற்ற பல நிறுவனங்கள் போட்டி போட்டன. இறுதியாக அமேசான் ப்ரைம் வீடியோ நிறுவனம் ஓடிடி உரிமையை கைப்பற்றி இருக்கிறது.
இதற்காக 120 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறது.
அனைத்து மொழி உரிமையும் இதில் அடங்கும்.
படம் முழுக்க அரசியல் ‘பஞ்ச்’ வசனங்கள்
உள்ள இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி
உள்ளது.
–