டெல்லியில் நடந்து வரும் ’ஜி -20’ உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ள உலக தலைவர்களுக்கு குடியரசு தலைவர் முர்மு இரவு விருந்து அளித்தார். பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்த உபசரிப்பு நடைபெற்றது.உலக தலைவர்களை பிரதமர் மோடி கைகளை கோர்த்துக்கொண்டு விருந்திற்கு அழைத்து சென்றார்.
விருந்தில் உலக தலைவர்களுடன், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிடோர் கலந்து கொண்டனர். நாடு முழுவதும் பிரசித்தி பெற்ற சுவையான 500 உணவுகளை தேர்வு செய்து, பங்கேற்ற தலைவர்களுக்கு அளிக்கப்பட்டது. பிரபல ஓட்டல் நிறுவனமான தாஜ் ஓட்டல் உணவு ஏற்பாடுகளை கச்சிதமாக செய்திருந்தது..
விருந்தில் பரிமாறப்பட்ட சில குறிப்பட்ட ரகங்கள்:
பருப்பு-பாதாம் புட்டு,மிஷ்ரி மாவா,கீர்,கேரட் அல்வா,மோட்டிச்சூர் லட்டு,உலர்ந்த பழங்கள்- இனிப்புகள்,வால்நட்-அத்தி புட்டிங்,காஷ்மீர் காவா,வடிகட்டிய காபி,டார்ஜிலிங் தேநீர்,பான் சுவை சாக்லேட் இலைகள்,தினை பொருட்கள்,சமோசா,பரதாஸ் போன்றவையோடு பல நூறு தினுஷுகள்.
தென் மாநிலங்களில் இருந்து இட்லி மற்றும் மசாலா தோசை,, வெங்காய மிளகாய் ஊத்தாப்பம்,மைசூர் தோசை உள்ளிட்டவை மெனுவில் இடம் பெற்றன.
விருந்தில் சைவ உணவுகள் மட்டுமே இடம் பெற்றிருந்தது. அசைவ உணவுகளும் மது வகைகளும் அறவே தவிர்க்கப்பட்டது.