June 01, 2023
ஜல்லிக்கட்டு போட்டியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் காளை வெற்றி பெற்ற நிலையில், பரிசு பொருட்களை ஆதரவற்றோர் இல்லத்திற்கு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஜல்லிக்கட்டு பேரவை மாநிலத் தலைவர் திரு பி.ராஜசேகரன் அவர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு விளையாட்டில், எங்கள் வீட்டுக் காளை கலந்து கொண்டு பெற்ற பரிசுப் பொருள்களை, நேற்று அவரது இல்லத்திற்கு நேரில் சென்று பெற்றுக் கொண்டேன். வழங்கப்பட்ட பரிசுப் பொருட்களான தொலைக்காட்சி, தங்க மற்றும் வெள்ளி நாணயங்களை ஆதரவற்றோர் இல்லத்திற்கு வழங்க உள்ளேன்.
தமிழகத்தின் அடையாளமான ஜல்லிக்கட்டு போட்டிகளைத் தடையிலிருந்து மீட்டெடுக்கப் பெரும்பங்காற்றியவர் திரு பி.ராஜசேகரன் அவர்கள். ஜல்லிக்கட்டு வீரர்களுக்குக் காப்பீடு உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கும் திரு பி.ராஜசேகரன் அவர்களது பணி பாராட்டத்தக்கது. இவ்வாறு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.