‘டிராகன்’ படத்தில் கீர்த்தி கேரக்டரில்தான் , கயாடு லோஹர் முதலில் நடிப்பதாக இருந்தார். கடைசி நேரத்தில் அவருக்கு பல்லவி வேடத்தை கொடுத்துள்ளார், இயக்குநர் அஸ்வத் .
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவான படம் ‘டிராகன்’. பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், உள்ளிட்டோர் நடித்த, இந்த படம் கடந்த மாதம் 21 ஆம் தேதி வெளியானது.
வசூலில் ‘டிராகன்’ படம் சாதனை படைத்து வருகிறது.இந்த 18 நாட்களில் ரூ. 140 கோடி வரை வசூல் செய்துள்ளது. பட்ஜெட் 37 கோடி ரூபாய்.
‘டிராகன்’ படத்தை தொடர்ந்து , இதன் நாயகி, கயாடு லோஹர். ‘இதயம் முரளி’ படத்தில் அதர்வா ஜோடியாக நடித்து வருகிறார்.
‘டிராகன்’ இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவுக்கு நன்றி தெரிவித்து லோஹர், தனது சமூக வலைத்தள பக்கத்தில் நீண்ட கடிதம் எழுதியுள்ளார்.
அதன் சுருக்கம்:
அஸ்வத் மாரிமுத்து, ‘ஜும் ஹால்’ மூலமாக என்னிடம் தொடர்பு கொண்டு ‘டிராகன்’கதையையும் , கீர்த்தி கேரக்டர் குறித்தும் சொன்னார். பிடித்திருந்தது.நடிக்க ஒப்புக்கொண்டேன்.
ஆனால் ஒரு மாதம் அவரிடம் இருந்து எந்த அழைப்பும் இல்லை. திடீரென ஒருநாள் பேசினார்.பல்லவி கேரக்டர் குறித்து விளக்கினார். அந்த வேடத்தில் நடிக்க வேண்டும் என்றார்.’டிராகனும், பல்லவியும், கயாடு லோஹரின் வாழ்க்கையை மாற்றுவார்கள் ‘என உறுதி அளித்தார்.
அது நடந்தே விட்டது .டிராகன்’ எனது வாழ்க்கயை நிஜமாகவே மாற்றி விட்டது, சொன்ன வாக்கை நீங்கள் ( அஸ்வத் ) காப்பாற்றி விட்டீர்கள் –காலமெல்லாம் உங்களுக்கு நன்றி உடையவளாக இருப்பேன்’ என கயாடு லோஹர், தனது வலைத்தளத்தில் உணர்ச்சி பொங்க குறிப்பிட்டுள்ளார்.
—