ஜனவரி-02.
தமிழகத்தில் ஸ்கரப் டைபஸ்(Scrub Typhus) என்ற பாக்டீரியா தொற்று அதிகரித்து வருகிறது.
ரிக்கட்ஸியா என்ற பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணிகள், பூச்சிகள் கடிப்பதால் ஸ்கரப் டைபஸ் ஏற்படுகிறது.
காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு, தடிப்புகள் ‘ஸ்கரப் டைபஸ்’ நோயின் முக்கிய அறிகுறிகள் ஆகும்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருப்பத்தூர், செங்கல்பட்டில் நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது
.
தமிழகத்தில் கிழக்கு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் ‘ஸ்கரப் டைபஸ்’ நோய் தாக்கம்
விவசாயிகள், வனப்பகுதியில் வசிப்போர், புதர் மண்டிய பகுதியில் இருப்போருக்கு நோயால் பாதிப்பு ஏற்படுகிறது.
நோய்க்கு மருத்துவர் பரிந்துரைப்படி அசித்ரோமைசின், டாக்ஸிசைக்கிள் மருந்து தரப்படுவதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
*