தலைப்புச் செய்திகள்… (03-12- 2023)

*மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்தீ கார் சட்டசபை தேர்தலில் அபார வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது பாரதிய ஜனதா கட்சி… தெலுங்கானாவில் ஆட்சியை பிடித்துள்ளது காங்கிரஸ்.

*230 தொகுதிகளை கொண்ட மத்தியபிரதேசத்தில் 163 தொகுதிகளை கைப்பற்றிய பாரதிய ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் அபார வெற்றி… காங்கிரஸ் 64 தொகுதிகளையும், பகுஜன் சமாஜ் கட்சி 2 தொகுதிகளையு கைப்பற்றின.

*200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தானில் 109 தொகுதிகளை கைப்பற்றி பாரதிய ஜனதா தனிப்பெரும்பான்மையுன் அவார வெற்றி…. 74 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்று ஆட்சியை பறிகொடுத்தது காங்கிரஸ்.

*90 தொகுதிகளை கொண்ட சத்தீஷ்காரில் பெரும்பான்மைக்கு 46 தொகுதிகள் தேவைப்பட்ட நிலையில் 53 தொகுதிகளை கைப்பற்றியது பாரதிய ஜனதா… பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் கட்சி 34 தொகுதிகளில் மட்டும் வெற்றி.

*தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சியிடம் ஆட்சியை பறிகொடுத்தது சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரதிய ராஷ்டிர சமிதி கட்சி… 65 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ் கட்சி.

*வளர்ச்சி தரும் என்ற நம்பிக்கையில் மக்கள் பாஜகவுக்கு வாக்களித்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம்… 2024-ல் ஹாட்ரிக் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் நம்பிக்கை.

*தெலுங்கனாவில் தங்களுக்கு ஆட்சி பொறுப்பை கொடுத்த மக்களுக்கு ராகுல் காந்தி நன்றி… ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர் மாநில மக்களின் தீர்ப்பை ஏற்பதாகவும், சித்தாந்தத்திற்கு இடையேயான போர் தொடரும் என்று உறுதி.

*4 மாநில தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து…. அனைத்துப் பிரிவினருக்கும் சாதகமான மாற்றம், முன்னேற்றம் மற்றும் செழிப்பு ஆகியவற்றால் நிறைந்த ஒரு ஆட்சி காலத்தை வழங்க வாழ்த்து..

*புயல் காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை காலை வரை அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல்… காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதி கனமழை பெய்யும் எனவும் எச்சரிக்கை..

*மிச்சாங் புயல் தீவிரமடைந்துள்ளதால், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

*புயல் காரணமாக ஊழியர்களை இயன்றவரை வீட்டில் இருந்து பணி செய்ய அறிவுறுத்த வேண்டும் என தனியார் நிறுவனங்களை தமிழக அரசு வலியுறுத்தல்… அத்தியாவசியமாகத் தேவைப்படும் பணியாளர்களை மட்டும் கொண்டு செயல்படவும் அறிவுறுத்தல்.

*புயல் எச்சரிக்கையை முன்னிட்டு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்…. உத்தரவை மீறி நாளை டாஸ்மாக் கடைகள் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு..

*கடைசி டி20-யிலும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா….5 போட்டிகள் கொண்ட தொடரில் 4-1 என்ற கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றியது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *