தலைப்புச் செய்திகள் ( 04-07-2023)

* யூஜிசி விதிமுறைகளின்படியே பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும்-ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தல்.

* கோவை சுகுணாபுரம் அருகே உள்ள தனியார் கல்லூரிக்கு சொந்தமான இடத்தில் சுற்றுச்சுவர் கட்டும் பணியின்போது சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழப்பு; ஒருவர் படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதி.

*நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கத் தயராகிறது பாரதீய ஜனதா. ஆந்திரா, தெலுங்கானா, ஜார்கண்ட், பஞ்சாப் மாநிலங்களுக்கு புதிய தலைவர்கள் நியமனம்.

* பாஜக 4 மாநிலங்களுக்கு புதிய தலைவர்களை நியமித்தன் எதிரொலி – மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்படலாம் என தகவல்.

*அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோதமாக கைது செய்யபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு – சென்னை உயர்நீதிமன்றத்தில் மூன்றவாது நீதிபதி விசாரணைக்குச் சென்றது வழக்கு.

* சென்னையில் 2020- ல் பறிமுதல் செய்த 22 கிலோ கஞ்சாவில் 11 கிலோவை எலி சாப்பிட்டு விட்டதாக போலிஸ் விளக்கம் – கைது செய்யப்பட்ட இருவரையும் விடுவித்து நீதிமன்றம் உத்தரவு.

* திரை அரங்கங்களின் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும் – தமிழக அரசிடம் திரையரங்கு உரிமையாளர்கள் மனு.

* சொன்னை சைதாப்பேட்டையில் அரசுக்கு சொந்தமான வீட்டுமனையை அமைச்சர் பொன்முடி அபகரித்தாக வழக்கு – லஞ்ச ஒழிப்புத் துறை 2003 ஆம் தொடர்ந்த வழக்கில் வரும் 6 ஆம் தேதி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.

* கிரஷர் ஜல்லி மற்றும் கல் குவாரி உரிமையாளர்களின் எட்டு நாள் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது – அமைச்சர் துரை முருகன் நடத்திய பேச்சில் உடன்பாடு.

* நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த வழக்கில் 4 மாணவர்கள் கைது – ஆள் மாறாட்டம் செய்ய ரூ 7 லட்சம் பேரம் பேசியதாக நரேஷ் என்ற மாணவர் வாக்கு மூலம்.

* சென்னை அடுத்த செங்குன்றம் பத்திரப் பதிவு அலுவலகத்தில வருமான வரித்துறை சோதனை – தமிழ் நாட்டில 270 பத்திரப் பதிவு அலுவலகங்கள் முறையாக செயல்படவில்லை என்று புகார்.

* சென்னையில் செம்மொழி பூங்கா எதிரில் உள்ள கிரவுண்ட் நிலத்தை அரசு மீட்டுக்கொண்டது சரிதான்.. தனி நபரின் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு.

*முதலமைச்சரின் காலை உணவு திட்டம் – 31,008 அரசுப் பள்ளிகளில் 15 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் திட்டம் விரிவாக்கம்.

*காவிரியில் இருந்து ஜூன் மாதத்திற்கான தண்ணீரை கர்நாடக அரசு முறையாக திறந்து விடவில்லை – காவிரி மேலாண்மை ஆணையத்தின் மூலம் கர்நாடக அரசுக்கு வலியுறுத்தவே டெல்லி செல்வதாக அமைச்சர் துரை முருகன் விளக்கம்.

* வெளிநாட்டு பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை மும்பை அலுவலகத்தில் நேற்று அனில் அம்பானியிடம் விசாரணை – இன்று மனைவி டீனா அம்பானி ஆஜராகி விளக்கம்.

*மலைப்பகுதிகளில் கன மழை பெய்வதால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரிப்பு- ஐந்தருவியில் குளிப்பதற்கு தடை/

*ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஒன்றரை வயது குழந்தையின் கை அகற்றப்பட்டதற்கு மருத்துவர்களின் கவனக்குறைவுதான் காரணம்- மருத்துவர்கள் குழு முன் ஆஜரான பெற்றோர் குற்றச்சாட்டு.

*நாமக்கல் அடுத்த சேந்தமங்கலத்தில் ஓட்டலில், பரோட்டா சாப்பிட்ட 38 பேருக்கு வாந்தி, மயக்கம். சுகாதாரமற்ற உணவு வழங்கிய ஓட்டலுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல்.

*திண்டிவனத்தில் அரசு முத்திரையுடன் கூடிய 25 துப்பாக்கிகள் உடன் சென்ற ஜீப்பை வளைத்தது போலீஸ்- ரஜினிகாந்த் நடிக்கும் லால் சலாம் படப்பிடிப்புக்கு டம்மி துப்பாக்கிகளை எடுத்துச் செல்வதாக சொன்னதார் ஜீப் விடுவிப்பு.

*தூத்துக்குடி திரையரங்கில் மாமன்னன் படம் பார்க்கச் சென்ற போது இலவசமாக பாப்கார்ன் கேட்டு வாக்குவாதம் – திமுக நிர்வாகிகள் இருவர் மீது வழக்குப்பதிவு..

*இந்தியாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் போஸ்டர்- டெல்லியில் உள்ள கனடா தூதர் விளக்கம் அளிக்குமாறு வெளியுறவுத்துறை உத்தரவு.

*சில நாடுகள் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை கருவிகளாக பயன்படுத்துகின்றன – ஷாங்காய் ஒத்துழைப்பு பாகிஸ்தான் பிரதமர் முன்னிலையில் பிரதமா் மோடி புகார்.

* வெளிநாட்டு பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை மும்பை அலுவலகத்தில் நேற்று அனில் அம்பானியிடம் விசாரணை – இன்று மனைவி டீனா அம்பானி ஆஜராகி விளக்கம்.

*அமெரிக்காவின் ஃபிலடெல்ஃபியா நகரில் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் இறப்பு- வயது குழந்தையும், 13 வயது சிறுவனும் படுகாயம்

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *