*அரசு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஜனவரி 9 – ஆம் தேதி முதல் அறிவித்து உளள வேலை நிறுத்தத்தை கைவிடச் செய்வதற்கு முயற்சி .. நாளை மறுதினம் சென்னையில் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு தொழிலாளர் நல ஆணையம் ஏற்பாடு.
*பொங்கல் பரிசுத்தொகுப்பை பெறுவதற்கான டோக்கன் விநியோகம் நாளை முதல் தொடங்குகிறது… பொங்கல் சிறப்பு தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்புடன் ரூ.1000 ரொக்கமாக வழங்கப்படவுள்ளது.
*டோக்கன் பெற்றவர்கள் ஜனவரி 10- ஆம் தேதி முதல் 13- ஆம் தேதி வரை பொங்கல் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் …. அரசு அறிபிப்பு.
*பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான கரும்பு கொள்முதல் செய்ய மாவட்ட ஆட்சியர் தலைமையில் வேளாண்துறை இணை இயக்குனர், கூட்டுறவு துறை இணை பதிவாளர், நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளரை கொண்ட குழு அமைப்பு … சென்னையில் உதவி ஆணையர் மற்றும் வேளாண்மை அலுவலர் கொண்ட குழு அமைத்து உத்தரவு.
*கரும்பை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் மூலம் விவிசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்…. பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்க கட்டுப்பாட்டு மையங்களும் திறக்கப்பட உள்ளதாக அறிவிப்பு.
*தமிழ்நாடு அரசின் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நாளை தொடங்குகிறது .. தமிழ்நாட்டில் புதிய தொழில்களை தொடங்குவதற்கு முதலீட்டாளர்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கை.
*ஓசூரில் உள்ள ஐ போன் உதிரிபாகங்கள் உற்பத்தி ஆலையில் ரூ 7000 கோடி முதலீடு செய்ய டாடா நிறுவனம் முடிவு … சென்னையில் நாளை நடைபெறும் முதலீட்டாளர் மாநாட்டில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தமிழக அரசின் தொழில் துறை தகவல்.
*தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.16,000 கோடி முதலீடு செய்யும் வின்ஃபாஸ்டு நிறுவனம்… நன்றி தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு.
*புதுச்சேரியில் வணிக வரித்துறை அலுவலகத்தில் இரண்டாவது நாளாக சி.பி.ஐ. சோதனை … ஊழல் புகார் காரணமாக பெண் அதிகாரியிடம் விசாரணை.
*திமுக இளைஞரணியின் இரண்டாது மாநில மாநாடு சேலத்தில் ஜனவரி 21- ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு .. மழை காரணமாக இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கு நடவடிக்கை.
*சென்னையை அடுத்த கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையத்தில் இருந்து பிற பகுதிகளுக்கு செல்ல போதிய இணைப்பு வசதி இல்லாமல் பயணிகள் அவதி … சென்னையின் வட எல்லையான எண்ணூர், திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல 50 கிலோ மீட்டர் பயணிக்க வேண்டியுள்ளதாக அன்புமணி ராமதாஸ் கருத்து.
*கனமழையால் பாதிக்கப்பட்ட நெல்லை- திருச்செந்தூர் ரயில் பாதையில் சோதனை ஓட்டம் முழுமை அடைந்ததால் ரயில்களை இயக்க நடவடிக்கை … டிசம்பர் 17- ஆம் தேதி பெய்த கன மழையால் சேதமடைந்த பாதை போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு.
*பிரதமர் நரேந்திர மோடி கேரளா சென்று கடலில் நீச்சல் அடித்து புகைப்படம் எடுக்கிறார், கோயில் கட்டும் இடத்திற்கு செல்கிறார் … கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்திற்கு செல்வதற்கு நேரமில்லை என்று காங்கிரஸ் தலைவர் கார்கே விமர்சனம்
*ஆதித்யா எல் 1 விண்கலம் தனது சுற்று வட்டப்பாதையில் சூரியனை நோக்கி நிலைநிறுத்தப்பட்டது … அடுத்த 5 ஆண்டுகளுக்கு சுற்று வட்டப்பாதையில் சுற்றியபடி ஆதித்யா விண்கலம் ஆய்வுகளை மேற்கொள்ளும்.
*ஆதித்யா எல்-1 திட்டம் வெற்றி மூலம் இந்தியா புதிய மைல்கல்லை எட்டியதாக ‘X’ தளத்தில் ட்வீட் செய்து பிரதமர் மோடி பெருமிதம்…இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு, இந்திய மக்களுடன் இணைந்து மோடி வாழ்த்து.
*மேற்கு வங்க மாநிலத்தில் திரினாமுல் காங்கிரஸ் நிர்வாகி சங்கர் ஆத்யாவை விசாரணைக்குப் பிறகு அமலாக்கத் துறையால் கைது … பொது விநியோகத் திட்டத்தில் குறைந்த விலையில் உணவுப் பொருட்கள் விநியோகம் செய்ததில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரில் நடவடிக்கை.
*24 பர்கானா மாவட்டத்தில் உள்ள சங்கர் ஆத்யா வீட்டுக்கு நேற்று சோதனை நடத்தச் சென்ற போது அமலாக்கத் துறை அதிகாரிகள் மீது மர்ம நபர்கள் தாக்கப்பட்ட சம்பவம் .. முதலமைச்சர் பதவியில் இருந்து மம்தா பானர்ஜி விலக வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சி வலியுறுத்தல்.
*அமெரிக்காவில் அலஸ்கா ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் பறக்கும் போது திடீரென கதவு உடைந்து கீழே விழுந்ததால் போர்ட்லேண்ட் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கம் .. பயணிகளால் எடுக்கப்பட்ட கதவு திறந்திருக்கும் படம் வலைதளங்களில் வைரல்.
*நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட இரண்டு மாகாண நீதிமன்றங்கள் தடை விதித்து உள்ளதற்கு எதிராக டொனால்டு டிரம்ப் தாக்கல் செய்துள்ள மேல் முறையீட்டு மனு … விரைவில் விசாரணை நடத்துவதற்கு அமெரிக்கா உச்ச நீதிமன்றம் முடிவு.
*பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் ஆலிவர் அமெரிக்காவின் கரீபியன் தீவுக்கு பயணம் செய்த விமானம் கடலில் விழுந்து விபத்து … நடிகரும் அவருடைய இரண்டு மகள்களும் மற்றும் விமான ஓட்டியும் உயிரிழந்த பரிதாபம்.
*பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தியதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேற்றம்… 56.25 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி முதலிடம். 54.16 புள்ளிகளுடன் இந்திய அணி 2-வது இடம். 36.66 புள்ளிகளுடன் பாகிஸ்தான் அணி 3-ம் இடம்.
*இசையால் உலகையும் உள்ளங்களையும் வென்றவர் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் புகழாரம் … நடிகர் கமல்ஹாசன் உட்பட பலர் ரகுமானை நேரில் சந்தித்து வாழ்த்து.
*தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கேரளாவில் நாளை வரை கன மழைக்கு வாய்ப்பு… திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்.
தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447