*எடப்பாடி பழனிசாமி மீதான நெடுஞ்சாலை துறை முறைகேடு வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு.. பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது டெண்டர் விடுவதில் ரூ 4800 கோடிக்கு முறைகேடு நடந்தது என்பது வழக்கு.

*மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மாதம் ஆயிரம் ரூபாய் பெறுவதற்கு ஒரு கோடியே ஆறு லட்சம் பேர் தேர்வு … மற்றவர்களுக்கு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை தெரிவிக்குமாறு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு

*முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆந்திரா மாநிலத்தில் முழு அடைப்புப் போராட்டம்.. கடைகள் அடைப்பு, பேருந்துகள் மீது கல்வீச்சு. போக்குவரத்து பாதிப்பு.

*சீமென்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து ஊழல் செய்ததாக கைது செய்யப்பட்ட சந்திரபாபு நாயுடு ராஜமுந்திரி சிறையில் அடைப்பு … விசாரணை நீதிமன்றம் ஜாமீன் தர மறுத்ததால் உயர்நீதிமன்றத்தை நாட முடிவு.

*சட்ட விரோத பணப்பறிமாற்ற வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் செந்தில் பாலாஜி உடல்நிலை சரியில்லை என்பதால் உடனே ஜாமீனில் விடுவிக்கவேண்டும் என்று வலியுறுத்தல்.. அமலாக்கத்துறை வெள்ளிக்கிழமைக்குள் பதிலளிக்குமாறு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

*அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் ரூ.1.10 கோடி மான நஷ்ட ஈடு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மனுத்தாக்கல்…. கொடநாடு வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக சனாதனத்தை ஆதரிப்பதாக தம்மை விமர்சிப்பதாக புகார்.

*திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி அருகே வேன் மீது லாரி மோதிய விபத்தில் பெண்கள் 7 பேர் உயிழப்பு .. சுற்றுலா சென்று விட்டு அதிகாலை திரும்பும்போது பரிதாபம்.

*ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அருந்ததி சமூகத்தினர் பற்றி அவதூறாக பேசியதாக மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு …. சம்மன் அனுப்பியதன் பேரில் ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜரானார் சீமான்.

*சென்னை அடுத்த பனையூரில் நேற்று ஏ.ஆர்.ரகுமான் நடத்திய இசை நிகழ்ச்சியில் போதிய ஏற்பாடுகளை செய்யாததால் டிக்கெட் வாங்கிய பல ஆயிரம் பேர் பாதிப்பு …கார்களை நிறுத்த இடமில்லாததாலும் அரங்கில் இருக்கை இல்லாததாலும் டிக்கெட் வாங்கியவர்கள் ஏமாற்றம்.

*பனையூர் இசை நிகழ்சிக்கு ஏற்பாடு செய்திருந்த ஏசிடிசி என்ற தனியார் நிறுவனத்திற்கு எதிராக வலை தளங்களில் பல ஆயிரம் பேர் புகார்.. அதிக விலைக்கு அதிகம் பேருக்கு டிக்கெட் விற்று லாபம் சம்பாதித்த ஏசிடிசி நிறுவனம் வலைதளத்தில் மன்னிப்புக் கேட்டுவிட்டு தப்பியது.

*சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று மாலை ஏற்பட்டிருந்த போக்குவரத்து நெரிசலால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாகனத்தையும் திருப்பி விட்டது போலீஸ் … இசை நிகழ்ச்சிகள் நடந்த இடத்தில் காவல் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு.

*இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட இடையூறுகள் அனைத்திற்கும் பொறுப்பு ஏறப்தாக இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அறிவுப்பு … அரங்கத்திற்குள் வர முடியாமல் திரும்பியவர்கள் டிக்கெட்டுகளை படம் எடுத்து அனுப்புமாறு வேண்டுகோள்.

*ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ 3 கோடி செலவில் மணி மண்டபம் .. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

*இமானுவேல் சேகரன் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டதால் பரமக்குடியில் போலீஸ் பாதுகாப்பு .. ராமநாதபுரம் மாவட்டத்தில் பல இடங்களில் கடைகள் அடைப்பு.

*சனாதனம் சர்ச்சையை அடுத்து அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு பதவி விலகக்கோரி தமிழகத்தின் பல இடங்களில் பாஜக சார்பில் போராட்டம்.. சென்னையில் அறநிலையத் துறை அலுவலகத்தை முற்றுகையிட அண்ணாமலை தலைமையில் பேரணியாக சென்றவர்கள் தடுத்து நிறுத்தம்.

*ஐடிபிஜ வங்கி நிர்வாகிகள் ரூ 600 கோடி கடன் கொடுத்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி மனு … சிபிஐ தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு.

*மின் கட்டணத்தை 430 விழுக்காடு வரை உயர்த்தி இருப்பதால் 10 லட்சம் சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக புகார்… கட்டணத்தை குறைக்கக் கோரி முதலமைச்சருக்கு மின் அஞ்சல் அனுப்பும் போராட்டத்தை தொடங்கியது தொழில் நிறுவனங்கள்.

*இந்தியா என்பதும் பராதம் என்பதும் ஒரே வார்த்தைதான் என்று அண்ணாமலை விளக்கம் .. அமைச்சர் உதய நிதி தலைக்கு விலை வைத்தவர் போலி சாமியார் என்றும் பேட்டி.

*தனியார் வாகனங்களில் ஒட்டப்பட்டு உள்ள G என்ற எழுத்தை நீக்கக் கோரி வழக்கு .. தமிழக அரசு பதில் தருமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு.

*தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே அரசுப் பள்ளிக்கூடத்தில் பட்டியலினப் பெண் சமைத்த உணைவை குழந்தைகள் சாப்பிடக் கூடாது என்று பெற்றோர் தடுப்பதாக புகார் .. பள்ளியில் உள்ள 11 பேரில் 2 பேர் மட்டுமே தாம் சமைத்த உணவை சாப்பிடுவதாக சமையல்கார பெண் வேதனை.

*சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மானுடன் டெல்லியில் பிரதமா் மோடி பேச்சு வார்த்தை .. இரு நாடுகள் இடையோயான உறவை மேம்படுத்துவது பற்றி ஆலோசனை.

*சாவரின் என்ற தங்கப்பத்திரம் திட்டத்தை வெளியிட்டது மத்திய அரசு .. வங்கிகள், தபால் நிலையங்கள் போன்ற இடங்களில் ஒரு கிராம் சுத்த தங்கத்தை ரூ 5,923-க்கு வாங்கலாம் என்று அறிவிப்பு.

*அயோத்தியில் ஜனவரியில் ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொண்டு விட்டு பக்தர்கள் திரும்பும் போது எங்காவது கோத்ராவில் நடந்தது போன்று நடக்கக் கூடும் .. பாரதீய ஜனதா அரசு விழிப்புடன் இருக்குமாறு மராட்டிய முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்ரே அறிவுறுத்தல்.

*கர்நாடக அரசு பேருந்துகளில் பெண்கள் இவலசமாக பயணம் செய்யும் திட்டத்திற்கு எதிராக பெங்களூரில் தனியார் பேருந்துகள் மற்றும் வாடகைக் கார், ஆட்டோக்கள் வேலை நிறுத்தம் … பொதுமக்கள் அவதி.

*சூடான் நாட்டில் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படை இடையே கடந்த சில நாட்களாக ஓய்ந்திருந்த சண்டை மீண்டும் ஆரம்பம் … ட்ரோன் மூலம் நடத்தப்பட்ட தாக்குலில் 40 பேர் கொல்லப்பட்ட பரிதாபம்.

*மொராக்கோ நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டு நான்கு நாட்களுக்குப் பிறகு இடிபாடுகளில் இருந்து ஒருவர் உயிருடன் மீட்பு .. உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,200 ஆக அதிகரிப்பு.

*அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜோகோவி்ச் சாம்பியன் பட்டம் வென்றார் .. ரஷ்ய வீரர் மெத் வதேவை வீழ்த்தினார் ஜோகோவிச்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *