*மதுரையில் பிராண்டமான கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்… 3 லட்சத்து 30 ஆயிரம் புத்தகங்களுடன் ஏராளமான சிறப்புப் பிரிவுகள்.
*கல்வியும், சுகாதாரமும் திராவிட மாடல் ஆட்சியின் இரு கண்கள்… கலைஞர் நூற்றாண்டு நூலகம் தென் தமிழ்நாட்டின் அறிவாலயம் என மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்து முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.
*சொன்னது மட்டுமின்றி சொல்லாததையும் செய்வான் இந்த ஸ்டாலின் என்பதற்கு எடுத்துக்காட்டு தான் சென்னையில் அமைக்கப்பட்ட மருத்துவமனையும், மதுரையில் அமைக்கப்பட்டுள்ள இந்த நூலகமும். மு.க.ஸ்டாலின் பெருமிதம்.
*திமுக ஆட்சிக்கு வந்தால் விடியல் என்று கூறியவர்கள் விடிந்தால் மதுக்கடைகளை திறந்து வைக்க முயற்சி.. அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்.
*கலைஞர் மகளிர் உரிமைத் தொகைப் பெறுவதற்கான டோக்கன் மற்றும் விண்ணப்பங்கள் ஜுலை 20 ஆம் தேதி முதல் வழங்கப்படும்.. முகாம் பற்றி விவரங்களை நியாயவிலைக் கடைகளில் தெரிந்து கொள்ள அறிவுறுத்தல்.
*பாஜக கூட்டணியில் உள்ள அதிமுகவை தொடர்ந்து பாமகவும் பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு.. நாட்டின் ஒற்றுமைக்கு எதிரானது என்பதால் பொது சிவில் சட்டத்தைக் கைவிடுமாறு சட்ட ஆணையத்துக்கு அன்புமணி கடிதம்.
*பொது சிவில் சட்டம் சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பறிக்கக் கூடியது..சட்ட ஆணையத்திற்கு எழுதிய கடிதத்தில வைகோ எதிர்ப்பு.
*ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கங்கள். நீளம் தாண்டுதலில் முரளி ஸ்ரீசங்கருக்கு வெள்ளிப்பதக்கம். உயரம் தாண்டுதலில் சர்வேஷ் வெள்ளிப்பதக்கம்.
*கோவை,திருப்பூர் மாவட்டங்களில் 600 சிறு,குறு நூற்பாலைகள் வேலை நிறுத்தம்.. நூல் விலை உயர்வுக்கு எதிராக போரட்டம்.
*சபரி மலையில் நடை திறப்பு.. ஆன் லைனில் பதிவு செய்து நாளை முதல் ஐந்து நாட்களுக்கு ஐய்யப்பனை தரிசிக்க அனுமதி.
*திண்டிவனத்தில் ஏ.டி.எம்.மையங்களுக்கு பணம் எடுக்க வருகிறவர்களிடம் மோசடி.. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இரணடு பேரை கைது செய்த போலிசார் 81 ஏ.டி.எம். கார்டுகளை பறிமுதல் செய்து நடவடிக்கை.
*சென்னையில் ஆன் லைன் மோசடிக் கும்பலிடம் ரூ 50 ஆயிரத்தை இழந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கு.. நைஜிரிய நாட்டைச் சேர்ந்த மோசா என்பவனை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து போலிஸ் விசாரணை.
*உக்ரைனில் அமைதி திரும்ப இந்தியா தன்னாலன பங்களிப்பை அளிக்கத் தயார்..பிரான்சில் அதிபர் மெக்ரனிடம் பிரதமர் மோடி உறுதி.
*மேக்ரனுக்கு சந்தனத்தால் ஆன சித்தார் கருவி பரிசாக அளிப்பு.. போச்சம்பள்ளி பட்டுச் சேலையை மேக்ரன் மனைவி பிரிஜிட்டு மோடி பரிசாக கொடுத்து வாழ்த்து.
*பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு அபுதாபி சென்ற பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு.. இரு நாடுகள் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து.
*தலைநகர் டெல்லி சாலைகளை சூழ்ந்த வெள்ளம் நான்காவது நாளாக வடியவில்லை.. கார், மோட்டார் சைக்கிள் போன்ற பல ஆயிரம் வாகனங்கள் தண்ணீரில் மூழ்கி நாசம்.
*யமுனை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல ஆயிரம் பேர் டெல்லியில் முகாம்களில் தங்க வைப்பு.. தண்ணீர் மட்டம் குறைந்து வருவதாக கெஜ்ரிவால் நம்பிக்கை.
*அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிசில் ஹாலிவுட் நடிகர்கள் சங்கம் லாபத்தில் பங்கு கேட்டு வேலை நிறுத்தம்.. ஏற்கனவே எழுத்தாளர்கள் சங்கமும் ஊதிய உயர்வுக் கேட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டு உள்ளதால் வெறிச்சோடின ஸ்டுடியோக்கள்.
*விம்பிள்டன் டென்னிஸ் அறையிறுதிப் போட்டியில் இத்தாலி வீரரை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார் நோவாக் ஜோகோவிச்.. கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் அதிக முறை இறுதிப் போட்டியில் ஆடியவர் என்றும் சாதனை.
*அதிமுக ஆட்சிக்காலத்தில், 230 கிலோ வாட் மின் கேபிள் பழுதை சீரமைப்பதற்காக டெண்டர் விடப்பட்டதில் மோசடி நடந்திருப்பதாக புகார்… தமிழ்நாடு மின் தொடர் அமைப்பு கழகத்தின் இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்ற ரவிச்சந்திரன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு.
*ஆடி அமாவாசையை முன்னிட்டு, ஜூலை 17ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை. விடுமுறையை ஈடுகட்டும் விதமாக 22ம் தேதி பள்ளி, கல்லூரிகள் இயங்கும்- மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் அறிவிப்பு.
*மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை கண்முன்னே பறிபோகிறது…திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றாதது ஏன் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி.