*காவிரியில் பத்து டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடுவதாக அறிவித்ததை செயல்படுத்தத் தொடங்கியது கர்நாடக அரசு.. அணைகளில் இருந்து காவிரியில் திறந்து விடப்படும் தண்ணீர் அளவு விநாடிக்கு 14 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு.
*நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஆகஸ்டு 20- ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதம் போராட்டம்.. திமுக இளைஞர் , மருத்துவ, மாணவர் அணிகள் கூட்டாக அறிவிப்பு.
*மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாட்டின் மீது மக்கள் கவனம் திரும்புவதை தடுக்க அதே நாளில் திமுக உண்ணாவிரதம் அறிவித்து உள்ளதாக ஜெயக்குமார் கருத்து… உள்துறை அமைச்சரை சந்தித்து நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்துவதே சிறந்த முயற்சி என்றும் கருத்து.
*அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் விழுப்புரம் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது.. வானூர் வட்டாட்சியராக இருந்த போது புகார் கொடுத்த குமாரபாலன் சக்கர நற்காலியில் நீதிமன்றத்திற்கு வந்து சாட்சியம்,
*வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை.. ஊரக வேலை உறுதித் திட்டம், ஜல் ஜீவன் திட்டம் உள்ளிட்டவையின் செயல்பாடுகள் குறித்து கருத்துக் கேட்பு.
* மின்சாரத்தில் இயங்கும் 10 ஆயிரம் பேருந்துகளை ரூ 57 ஆயிரம் கோடி செலவில் வாங்க முடிவு .. பிரதமரின் இ-சேவை பேருந்து திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
*மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாகச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து … காரில் பயணம் செய்த மூன்று பேரும் உயிரிழந்த பரிதாபம்.
*செங்கற்பட்டு மாவட்டம் திருப்போரூர் வட்டத்தில் உள்ள ஆளவந்தார் *அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலங்களில் இருந்த ஆக்கிரமிப்பாளர்களை நான்கு வாரங்களில் அகற்ற வேண்டும் … அறக்கட்டளை தொடங்கப்பட்ட நோக்கத்தை நிறைவேற்ற சொத்துக்களை பயன்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு.
*சென்னை தியாகராயர் நகரில் இலவசமாக பிரியாணி கொடுக்க மறுத்த கடைக்காரர் மீது தாக்குதல்.. போதையில் ரகளை செய்த போலீ்ஸ்காரர்கள் இருவரை பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் நடவடிக்கை.
*ஹிஜாவு நிதி நிறுவன நிர்வாகி கலைச்செல்வி ஜாமீன் மனு தள்ளுபடி .. ஏற்கனவே சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்த ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றமும் தள்ளுபடி செய்து உத்தரவு.
*இமாசலப் பிரதேசத்தில் கன மழை மற்றும் நிலச்சரிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு.. சேதங்களை சரி செய்வதற்கு பத்து ஆயிரம் கோடி ரூபாய் செலவும் ஓராண்டு காலமும் ஆகும் என்று முதலமைச்சர் சுக்விந்தர் சிங் பேட்டி.
*டெல்லியில் உள்ள நேரு அருங்காட்சியகம் மற்றும் நினைவகத்தின் பெயர் பிரதமர் அருங்காட்சியகம் என்று மாறியது.. பெயர் மாற்றத்தால் நேருவின் பெயர் மறைந்துவிடாது என்று மத்திய அமைச்சர் கருத்து.
*திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தைகளின் அச்சுறுத்தல் தொடருகிறது.. நடந்து செல்லும் பயணிகளுக்கு மூங்கில் கைத்தடிகளை வழங்க ஆரம்பித்தது கோவில நிர்வாகம்.
*உக்ரைன் கை வசம் இருந்த ஆயுதங்கள் பெரும்பாலும் தீர்ந்து விட்டதாக ரஷியா கருத்து .. மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்கள் சிறந்தவை என்ற நம்பிக்கை உடைந்து விட்டதாகவும் விமர்சனம்.