*அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணையின் போது போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று அமலாக்கத் துறை அறிக்கை… குற்றச்சாட்டுகளுக்கான ஆதராங்களை காட்டி கேள்வி கேட்டபோது மறுக்கவில்லை என்றும் விளக்கம்.
* கடந்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு சென்னை அமர்வு நீதிமன்றத்தில் இருந்து மாற்றம்… எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளுக்கு உரிய சிறப்பு நீதிமன்றம் இனி விசாரிக்கும்.
*சந்திராயன்- 3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிந்ததாக இ்ஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவிப்பு.. விண்கலத்தை திட்டமிட்டபடி ஆகஸ்டு 23- ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கவும் நடவடிக்கை.
*மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு இதுவரை ஒரு கோடியே 54 லட்சம் பேர் விண்ணப்பம் .. எஞ்சியவர்கள் விண்ணப்பங்களை பெறுவதற்கு நாளை முதல் 20- ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று அரசு அறிவிப்பு.
*தமிழ்நாட்டை திமுக நிரந்தரமாக ஆளவேண்டும் என்ற கலைஞரின் கனவை நிறைவேற்றிக் காட்ட வேண்டும்.. ராமநாதபுரத்தில் நடைபெற்ற தென்மாவட்ட திமுக வாக்குச் சாவடி முகவர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.
*வறட்சி மாவட்டமாக இருந்த ராமநாதபுரத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றது திமுக ஆட்சிதான் என்று மு.க.ஸ்டாலி பேச்சு.. வளர்ச்சித் திட்டங்களையும் பட்டியலிட்டார் முதலமைச்சர்.
*பரமக்குடி பாஜக நிர்வாகி முத்துலிங்கம் வீட்டிலேயே சிறைவைப்பு .. முதலமைச்சரின் ராமநாதபுரம் மாவட்ட நிகழ்ச்சிகள் பற்றி வளைதளத்தில் அவதூறு கருத்து பரப்பியதால் காவல் துறை நடவடிக்கை
*மேல்பாதி திரவுபதி அம்மன் கோயிலுக்குள் அடுத்த 15 நாட்களுக்குள் பட்டியலின மக்களை அழைத்துச் செல்ல நடவடிக்கை .. விழுப்புரத்தில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு.
*சென்னையில் அண்ணா நகரில் போதையில் இருந்த ஓட்டுநர் அரசு பேருந்தை கார் மீது மோதி விபத்து… காரில் பயணம் செய்த பெண் தட்டிக் கேட்டதால் பேருந்தை சாலையில் நிறுத்திவிட்டு ஓட்டம்.
*விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடை பெறும் அகழாய்வில் தங்கத் தாலி கண்டெடுப்பு… அந்தக் காலத்திலேயே தாலியை கலை நயத்துடன் செய்து இருப்பது கண்டு ஆய்வாளர்கள் வியப்பு.
*சென்னையில் ஒரே இடத்தில் 15 நாட்களுக்கு மேல் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் …மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை.
*என்.எல்.சி. நிலக்கரி சுரங்கங்களில் தொழிலாளர்கள் உயிரிழப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவு .. பாதிக்கப் படுகிறவர்கள் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டு வருவதாக என்.எல்.சி. தரப்பில் உறுதி.
*மதுரையில் நடைபெற உள்ள மாநாடு பற்றி அதிமுக தீவிர பிரச்சாரம் .. தொடர் ஓட்டங்கள், பிரச்சார வாகனங்கள் மூலம் பொது மக்களுக்கு தெரிவிக்க ஆங்காங்கு நடவடிக்கை.
*கோயம்புத்தூரில் கைக்குழந்தையுடன் காலில் விழுந்து இடமாறுதல் கேட்ட பேருந்து ஓட்டுநர் கண்ணன் , அவர் விரும்பிய தேனிக்கு மாற்றம் .. போக்கு வரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் நடவடிக்கை.
*கும்மிடிப்பூண்டி அருகே பட்டாக் கத்தி உடன் மிரட்டல் வீடியோ எடுத்து வலை தளங்களில் பதிவு … மூன்று பேரை கைது செய்த போலீஸ் மேலும் ஒருவருக்கு வலைவீச்சு.
*மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான டெண்டர் கோரியது மத்திய அரசு … ஜப்பான் நிறுவனம் கடன் வழங்கியதை அடுத்து 33 மாதங்களில் கட்டி முடிக்க உள்ளதாக தகவல்.
*மத்திய பிரதேச மாநிலத்தில சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே 39 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது பாரதீய ஜனதா .. சத்தீஷ்கர் மாநிலத்திற்கும் 21 வேட்பாளர்கள் பெயரை வெளியிட்டு அதிரடி.
*நாட்டிற்கு செய்த சேவைக்காக ஜவகர்லால் நேரு பெயர் என்றென்றும் நினைவுக் கூறப்படும் .. டெல்லியில் உள்ள நேரு அருங்காட்சியகத்தின் பெயரை மத்திய அரசு குறித்து ராகுல் காந்தி கருத்து.
*பெரியார், அம்பேத்கர் கருத்துகளை தமது பேச்சால் வளப்படுத்துகிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் .. பிறந்த நாள் வாழ்த்துச் செய்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்.
*திருப்பதி மலைப்பாதையில் மேலும் ஒரு சிறுத்தை வனத்துறை கூண்டில் சிக்கியது .. நடைபயணமாக செல்லும் பக்தர்கள் பாதுகாப்புக்காக கைத்தடி வழங்குவதும் தொடருகிறது.
*நடிகர் ரஜினிகாந்தி நடித்த ஜெயிலர் படம் உலகம் முழுவதும் முதல் ஒரு வாரத்தில் 375 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை .. தமிழ் சினிமாப் படங்களிலேயே இதுவே அதிகப்பட்ச வசூல் என்று சன் பிக்சர்ஸ் அறிவிப்பு.