தலைப்புச் செய்திகள் (21-09-2023)

*காவிரி மேலாண்மை வாரியம் பிறப்பித்த உத்தரவு படி தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு ஐந்தாயிரம் கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் …கர்நாடக அரசுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவு.

*கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா தலைமையில் அனைத்துக் கட்சிக் குழு டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஷெகாவாத்துடன் சந்திப்பு .. காவிரி மேலாண்மை வாரியத்தின் உத்தரவை செயல்படுத்துமாறு நிர்ப்பந்திக்கக் கூடாது என்று வலியுறுத்தல்.

*காவிரி நீர் விவகாரம் தொடர்பாக கர்நாடகத்துடன் பேச்சு வார்த்தை நடத்துவது இல்லை என்பது தான் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு .. உச்சநீதிமன்றத்தை நாடுவது மட்டுமே தீர்வு என்று அமைச்சர் துரை முருகன் பேட்டி.

*கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபிணி அணைகளில் இருந்து விநாடிக்கு 4600 கன அடி தண்ணீர் திறப்பு… மேலாண்மை ஆணைய உத்தரவுபடி விநாடிக்கு ஐந்தாயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிட மறுப்பு.

*அதிமுகவின் பெயர்,கொடி,சின்னம் ஆகியவற்றை பன்னீர் செல்வம் அணி பயன்படுத்த தடை விதிக்கக் கோரிக்கை… எடப்பாடி பழனிசாமி மனுவை ஏற்ற உயர்நீதிமன்றம், பன்னீர் தரப்பு பதிலளிக்க உத்தரவு.

*தென் சென்னை மாவட்டத்தில் மேடவாக்கம், மணப்பாக்கம், ராமாபுரம் ஆகிய இடங்களில் நடை பெறும் சாலை மேம்பாட்டு பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு .. பருவ மழை தொடங்குவதற்கு முன்பு வேலையை முடிக்க உத்தரவு.

*மோடியை பிரதமராக ஏற்பவர்கள் உடன் மட்டுமே பாஜக கூட்டணி அமைக்கும் என்று அண்ணாமலை விளக்கம் … அண்ணாதுரை மீது தமக்கு பெரிய மதிப்பு உள்ளதாகவும் கருத்து.

*கடந்த 1956- ஆம் ஆண்டில் மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அண்ணாமலை மன்னிப்பு கேட்டார் என்று செய்தி வெளியிடவில்லை .. அண்ணாதுரை கருத்துடன் முத்துராமலிங்கத் தேவர் மாறுபட்டார் என்றே அப்போது செய்தி பதிவாகி உள்ளதாகவும் ஆங்கில நாளேடான இந்து விளக்கம்.

*கொடநாடு கொலை வழக்குடன் எடப்பாடி பழனிசாமியை தொடர்பு படுத்தி பேசுவதற்கு அமைச்சர் உதயநிதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை .. இழப்பீடு கேட்டு தொடரப்பட்ட வழக்கில் உதயநிதி பதிலளிக்கவும் உத்தரவு.

*மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு தகுதிக்கான தேர்வில்லை என்பது நிரூ பணமாகிவிட்டதாக மு.க.ஸ்டாலின் அறிக்கை .. பூஜ்யம் மதிப்பெண் பெற்றால் கூட முதுகலை மருத்துவப் படிப்பில் சேரலாம் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது பற்றி விமர்சனம் .

*பூஜ்யம் மதிப்பெண் பெற்றால் கூட முதுகலை மருத்துவப் படிப்பில் சேரலாம் என்றால் நீட் தேர்வு நடத்துவது எதற்காக ? மத்திய அரசுக்கு அன்புமணி கேள்வி.

*கிருஷ்ணகிரியில் விரைவு உணவு விடுதியில் கோழிக்கறி சாப்பிட்ட 26 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி.. கோழிக்கறியை பரிமுதல் செய்த அதிகாரிகள் விடுதிக்கு சீல்வைப்பு.

*நெல்லையில் இருந்து சென்னைக்கு 24- ஆம் தேதி வந்தே பாரத் ரயில் சேவை .. பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்க ஏற்பாடு.

*நாகப்பட்டிணத்தில் இருந்த இலங்கையின் காங்கேசன் துறைக்கு அக்டோபர் முதல் வாரத்தில் பயணிகள் கப்பல் போக்குவரத்து.. 150 பேர் பயணம் செய்யக்கூடிய படகை கொடுத்தது இந்திய கப்பல் போக்குவரத்துக் கழகம்.

*கனடாவில் இருந்து வருவதற்கான விசாவை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்க இந்தியா உத்தரவு … காலிஸ்தான் தலைவர் நிஜ்ஜார் கொல்லப்பட்டதற்கு இந்தியா உளவு ஏஜென்சிகள் காரணமாக இருக்கலாம் என்று கனடா பிரதமர் தெரிவித்ததை அடுத்து நடவடிக்கை.

*கனடாவில் மேலும் ஒரு காலிஸ்தான் தீவிரவாதி சுட்டுக் கொலை .. சுக்துல் சிங் என்பவர் கொல்லப்பட்டதற்கு தீவிரவாதக் குழுக்கள் இடையேயான விரோதமே காரணமாக இருக்கலாம் என்று தகவல்.

*மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மகளிர் மசோதாவை மாநிலங்களவையிலும் நிறைவேற்ற நடவடிக்கை .. விவாதத்தில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் பங்கேற்பு.

*நிலவில் 14 நாள் இரவுப் பொழுது முடிந்து பகல் பொழுது ஆரம்பம்.. சந்திராயன் விண்கலத்தின் லேண்டர் மற்றும் ரோவர் மீது சூரிய ஒளி பட ஆரம்பித்ததால் மீண்டும் செயல்படச் செய்வதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் நடவடிக்கை.

*டெல்லி ரயில் நிலையத்தில் போர்ட்டருக்கான சீருடை அணிந்து பயணிகள் பெட்டியை சுமந்தார் ராகுல் காந்தி … போர்ட்டர்களின் அன்றாட பிரச்சினைகளை நேரில் அறிந்து கொள்ள நடவடிக்கை.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *