தலைப்புச் செய்திகள் (23/07/2023)

• நீதிமன்றத்தில் காந்தி மற்றும் திருவள்ளுவர் உருவப்படங்கள் தவிர வேறு படங்கள், சிலைகளுக்கு அனுமதி கிடையாது… உயர்நீதிமன்ற பதிவாளர் சுற்றறிக்கையால் சர்ச்சை.

• அம்பேத்கர் படத்தை அகற்ற வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக திருமாவளவன் கண்டனம்… அம்பேத்கரின் சிலைகளோ, படங்களோ இருப்பது எந்த வகையில் தவறு என ராமராஸ் கேள்வி.

• தமிழ்நாட்டில் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு சோதனை… நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள எஸ்.டி.பி.ஐ., கட்சி தலைவர் முபாரக் வீட்டிலும் ரெய்டு.

• தி.மு.க., அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சி ஆர்பாட்டம்… சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்பு.

• வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் வசம் தேர்தல் நாடாளுமன்றத் வெற்றி…தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்கின்ற வலிமையுடன், பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளுங்கள் என தொண்டர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம்.

• தேர்தல் வாக்குறுதிப்படி கட்டுமான பொருட்களின் விலையை குறைக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு. எடை கணக்கில் தக்காளி வாங்கிய நிலை மாறி தற்போது எண்ணிக்கை கணக்கில் பயன்படுத்தும் நிலை உள்ளதாகவும் வேதனை.

• வருவாய் மற்றும் பேரிடர் துறையில் 110 தாசில்தார்களை, துணை கலெக்டர்களாக பதவி உயர்வு அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவு… 2022 ஆம் ஆண்டிற்கான பதவி உயர்வு பட்டியல் உத்தரவு விரைவில் வெளியிடப்படும் என தகவல்.

• ஆசிய, கேலோ விளையாட்டு போட்டிகளுக்கு பயிற்சி அளிக்க மணிப்பூரில் சாதகமற்ற சூழல் நிலவுவதால், முதலமைச்சர் ஸ்டாலின் உதவிக்கரம்… தமிழ்நாட்டில் விளையாட்டு பயிற்சிகளை மேற்கொள்ள வருமாறு மணிப்பூர் விளையாட்டு வீரர்களுக்கு அழைப்பு.

• தமிழகத்தில் மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வு ஜூன் 25ஆம் தேதி தொடங்கும் என அறிவிப்பு… முதல் கட்ட கலந்தாய்வு முடிவுகள் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் மருத்துவ கல்வி இயக்ககம் தகவல்.

• மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசு கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் காட்டம்… பிறமாநிலங்களில் நடைபெறும் சம்பவங்களை மணிப்பூர் வன்முறையுடன் எப்படி தொடர்பு படுத்த முடியும் என்று கேள்வி.

• இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது மணிப்பூர் விவகாரம்… மணிப்பூர் விவாகரம் தொடர்பாக அதிகளவில் அறிக்கைகள் வெளிவராமல் இருப்பதாக இங்கிலாந்து எம்பி பியோனா புரூஸ் கவலை.

• சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் ராஜேஸ்வரி என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது… ராஜேஸ்வரியின் தங்கை உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

• ஆந்திர மாநிலம் நாசராவ்பேட்டையில் நடிகர் சூரியாவு பிறந்த நாளுக்காக பேனர் கட்டிய கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு… பேனர் கட்டும்போது இரும்பு கம்பி, மின்கம்பியில் உரசியதால் மின்சாரம் பாய்ந்தது உயிரிழந்த சோகம்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *