தலைப்புச் செய்திகள் (30-07-2023)

*மணிப்பூர் மாநிலத்தில் நடந்து கலவரங்களைக் மத்திய-மாநில அரசுகள் கட்டுப்படுத்த தவறி விட்டன.. எதிர்க்கட்சிகளின் 21 எம்.பி.க்கள் குழு முகாம்களை நேரில் ஆய்வு செய்த பிறகு புகார்.

*சட்டம்-ஒழுங்கு பிரச்சினை குறித்து மத்திய அரசுக்கு உடனே அறிக்கை அனுப்புங்கள்.. மணிப்பூர் ஆளுநரை நேரில் சந்தித்து எம்.பி.க்கள் குழு வலியுறுத்தல்.

*மணிப்பூர் நிலவரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்ப எதிர்க்கட்சிகள் குழு முடிவு.. நம்பிக்கை இல்லாத தீர்மான விவாதத்தின் போது முன் வைக்கவும் திட்டம்.

*பி.எஸ்.எல்.வி-சி 56 ராக்கெட் சுமந்து சென்ற 7 செயற்கைக் கோள்களும் புவி சுற்றுவட்டப்பாதையில் வெற்றகரமாக நிலை நிறுத்ததம்.. ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது பி.எஸ்.எல்.வி.-சி 56 ராக்கெட்.

*ஆந்திராவில் கோதாவரி ஆற்றில் விநாடிக்கு 15 லட்சம் கன அடி நீர் வெளியேற்றம்.. பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் ஐந்து மாவட்டங்கள் தத்தளிப்பு.

*புதுச்சேரி மாநிலத்தின் ஏனாம் மாவட்டத்திலும் கோதவரி வெள்ளம் புகுந்தது.. தாழ்வான இடங்களை தண்ணீர் சூழ்ந்ததால் இயல்பு வாழ்க்கை முடக்கம்.

*தமிழ்நாட்டில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து விட்டதால் சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும்.. அரசு மருத்துவமனைகளில் போதிய மருந்துகளை இருப்பு வைக்கவும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.

*“எதைச் சொல்லி அவர்களை தேற்றுவது என எங்களுக்கு தெரியவில்லை.. மணிப்பூர் அரசு மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டனர்” மணிப்பூரில் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளான பெண்களின் குடும்பங்களை சந்தித்தது குறித்து திமுக எம்.பி. கனிமொழி உருக்கம்

*விவசாய நிலங்களை எளிதாக எடுத்து விமான நிலையம் கட்டிவிடலாம்..நிலக்கரி எடுத்துவிடலாம்..எதை வைத்து சாப்பிடுவீர்கள் ?… கட்டிடங்களை இடித்து விட்டு மீண்டும் விளை நிலமாக பயன்படுத்த முடியுமா? என்று சீமான் கேள்வி.

*நெய்வேலி அடுத்த வளையாமாதேவி கிராமத்தில் விவசாய நிலத்தில் கால்வாய் அமைக்கும் பணியில் என்.எல்.சி தீவிரம்.. போலிஸ் குவிப்பபால் எதிர்ப்புத் தெரிவிக்க முடியாமல் விவசாயிகள் தவிப்பு.

*ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்காக கடந்த மாதம் கோரிய ஒப்பந்தப் புள்ளியை ரத்து செய்தது தமிழ்நாடு மின்வாரியம்… விதிகளில் திருத்தம் செய்து புதிய ஒப்பந்தப் புள்ளி கோர முடிவு.

*கர்நாடகத்தின் நீர்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்தது.. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக சரிவு.

*இஸ்லாமிய பெண்கள் நான்காயிரம் பேர் முதன் முறையாக ஆண் துணையின்றி ஹஜ் பயணம்..தேவையான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்த சவுதி அரசுக்கு மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி நன்றி.

*தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பம் அதிகமாக இருக்கும்..பகல் நேரம் வெப்பம் 4 டிகிரி செல்சியஸ் வரை கூடும் என்று வானிலை மையம் தகவல்.

*மாஸ்கோ நகரத்தின் மீது உக்ரைன் ட்ரோன் மூலம் தாக்குதல்.. விமான நிலையம் மூடல்.

*அமெரிக்கா அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் மேலும் ஒரு இந்தியா வம்சா வழி வேட்பாளர்..ஹிர்ஷ் வர்தன் சிங், குடியரசுக் கட்சி வேட்பாளராக போட்டியிடப் போவதாக அறிவிப்பு.

*நைஜீரியா போதைக் கடத்தல் கும்பல் இந்தியாவின் டெல்லி, மும்பை மற்றும் பெங்களூரு நகரங்களில் தங்கி போதைப் பொருள் கடத்தல்..

*சர்வதேச போதைக் கடத்தல் கும்பலை பிடிப்பதில் தான் மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு கவனம் செலுத்துவதாக மண்டல இயக்குநர் அரவிந்தன் தகவல்.

*பாகிஸ்தானில் கைபர் பகதூன் மாகணத்தில் ஜே. யு. எல். எப். கட்சி ஊர்வலத்தில் குண்டு வெடித்ததில் 35 பேர் இறப்பு…200 பேர் காயம்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *