தலைப்புச் செய்திகள் (30-09-2023)

* ரூ.2000 நோட்டுக்களை மாற்றுவதற்கான காலக்கெடு நீட்டிப்பு… இன்றே இறுதி நாளாக இருந்த நிலையில் அக்.7ம் தேதி வரை வங்கிகளில் கொடுத்து மாற்றி கொள்ளலாம் என ஆர்.பி.ஐ அறிவிப்பு. புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுக்களில் 96% திரும்ப பெறப்பட்டுள்ளதாகவும் ஆர்.பி.ஐ தகவல்.

*சொத்துக்குவிப்பு வழக்கை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க எதிர்ப்பு… அமைச்சர் பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு.

*நிலவின் தென் துருவத்தில் இருக்கும் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை எழுப்பும் பணி தீவிரம். இன்றுடன் நிலவில் சூரியன் மறைய தொடங்க இருப்பதால் லேண்டர், ரோவரை எழுப்ப இதுவே கடைசி வாய்ப்பு. சந்திரயான் 3 அனுப்பப்பட்டதற்கான நோக்கத்தை 100% நிறைவு செய்துள்ளதாக விஞ்ஞானிகள் தகவல்.

*குன்னூர் மரப்பாலம் அருகே 50 அடி பள்ளத்தில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் 6 பேர் உயிரிழப்பு….சுற்றுலா பேருந்தில் 54 பேர் பயணித்த நிலையில், காயமடைந்த 30க்கும் மேற்பட்டோர் குன்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் – 4 பேர் கவலைக்கிடம் என தகவல்.

*மதுரையில் வீட்டின் முன்பு தேங்கிய கழிவுநீரை அகற்ற ரூ.10,000 லஞ்சம் வாங்கிய உதவிப்பொறியாளர் விஜயகுமார் கைது… லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.

* சென்னை, சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் மேற்கூரை விழுந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம்… விபத்து நடந்த பெட்ரோல் பங்கிற்கு சீல் – சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை.

*ரூ.43,000-க்கு கீழ் வந்தது தங்கம் விலை….சென்னையில் தங்கம் சவரனுக்கு ரூ. 240 குறைந்து ரூ.42,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ச்சியாக 10 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,520 வரை குறைந்துள்ளது.

*டெங்கு போன்ற நோய்களை தடுக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது…. நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு போன்றவை அனைத்து சுகாதார நிலையங்களிலும் வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்.

*சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலக வளாகத்தில் 3 வகையான ஆசிரியர் அமைப்புகள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாநிலை போராட்டம்… கல்வி கற்பிக்க வேண்டிய ஆசிரியர்கள் அவர்களின் உரிமைகளைக் கோரி போராடும் நிலைக்கு தள்ளுவதே அவர்களுக்கு இழைக்கப்படும் அவமானம் என காட்டம்.

*ஆசிய விளையாட்டு போட்டி டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா மற்றும் ருதுஜா போசலே தங்கப் பதக்கம் வென்றனர்…. இறுதிப் போட்டியில் இந்திய ஜோடி 2-6, 6-3, 10-4 என்ற செட் கணக்கில் தைபே ஜோடியை வீழ்த்தியது.

* திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பக்தர்கள் இலவச தரிசனம் செய்ய 45 மணி நேரமாக காத்திருப்பு…. புரட்டாசி மாத 2வது சனிக்கிழமை என்பதால் கூட்டம் நிரம்பி வழிவதால் சுமார் 7 கிலோ மீட்டர் நீள வரிசையில் இலவச தரிசனத்திற்காக பக்தர்கள் காத்திருப்பு.

*அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான பண மோசடி வழக்கில் எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கான நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல்…3 வழக்குகள் பதியப்பட்ட நிலையில், 3 வழக்குகளிலும் குற்றப்பத்திரிகை தாக்கல்.

*தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதையடுத்து, ஐந்தருவி மற்றும் மெயின் அருவிகளில் காட்டாற்று வெள்ளம்… பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை.

*காவிரி விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டி ஆளுநர் மாளிகையை, தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் முற்றுகையிட முயற்சி… அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் உட்பட 500 க்கும் மேற்பட்டோர் கைது.

*சூரியனின் எல்1 புள்ளியை நோக்கி நெருங்கும் ஆதித்யா எல்-1 விண்கலம்… பூமியிலிருந்து 15 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள லெக்ராஞ்சியன் பாயிண்ட் -1 இலக்கை நெருங்குகிறது. 9.2 லட்சம் கி.மீ தூரத்தை ஆதித்யா விண்கலம் கடந்துள்ளதாக இஸ்ரோ தகவல்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *