துப்பாக்கியால் சுட்டு டிஐஜி தற்கொலை ஏன்? – அதிர்ச்சி தகவல்

ஜுலை,07-

கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்து இருக்கிறது.

கோயம்புத்தூர் ரேஸ்கோர்ஸ் பகுதியில் தங்கி இருந்த அவர் அதிகாலை ஏழுந்து நடைபயிற்சி சென்றுவிட்டு  திரும்பினார். அந்த முகாம் அலுவலகத்தில் அவருக்கு துணையாக தங்கி இருந்தரவி என்ற போலிஸ்காரரின் துப்பாக்கியை வாங்கிய விஜயகுமார் நெற்றியில் வைத்து காலை 6.50 மணிக்கு தன்னைத் தானே சுட்டுக்கொண்டார். குண்டு பாய்ந்த வேகத்தில் பீறிட்டு வந்த ரத்தத்துடன் கீழே சரிந்த அவருடைய உயிர் சில நிமிடங்களில் பிரிந்து விட்டது.

உடனடியாக இந்த தகவல் மற்ற போலிஸ்காரர்களுக்கும் பரவியது. ஏராளமானவர்கள் திரண்டுவிட்டனர். பிரேத பரிசோதனைக்காக உடல் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

மனைவியும் மகளும் சென்னையில் வசிப்பதால் விஜயகுமார் கோவையில் தனியாக தங்கி இருந்தார். கடந்த சில மாதங்களாகவே அவர் தூக்கக் குறைபாட்டால் பெரும் அவதிப்பட்டு வந்ததாக உடன் பணி செய்தவர்கள் தெரிவித்து உள்ளனர்.  இதற்காக அவர் மருந்துகளையும் எடுத்து வந்திருக்கிறார். நேற்றிரவு துணை ஆணையர் குழந்தையின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட விஜயகுமார், கடந்த இரண்டு நாட்களாக கண்ணை மூடக்கூட இல்லை என்று மற்ற நண்பர்களிடம் சொல்லி வேதனைப் பட்டு உள்ளார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலே தற்கொலைக்கு காரணம் என்று தெரிவித்து இருக்கின்றனர்.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயகுமார் ஐ.பி.எஸ்.தேர்வில் தேர்ச்சி பெற்று கடந்த 2009 ஆம் ஆண்டு காவல் துறை பணியில் சேர்ந்தவர். நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றி உள்ளார்.

டி.ஐ.ஜி. விஜயகுமார் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு-  “டி.ஐ.ஜி. விஜயகுமார் மரணம் அடைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன். தனது பணிக்காலத்தில் பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றி தமிழக காவல்துறைக்கு பெருமை சேர்த்தவர்.  டி.ஐ.ஜி. விஜயகுமாரின் குடும்பத்தாருக்கும், காவல்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்” இவ்வாறு முதல்வர் தமது செய்தியில் தெரிவித்து இருக்கிறார்.

000

 

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *