ஜுலை, 25-
சென்னையில் பிரபல டெக்ஸ்டைல் உரிமையாளரின் கார் மோதி 60 வயது முதியவர் இறந்த சிசிடிவி காட்சிகள் வைரலாகி உள்ளது.
கே.கே நகரை சேர்ந்த ரவிவர்மா என்பவர் இரு சக்கர வாகனம் ஒன்றில் தியாகராயர் நகரில் உஸ்மான் சாலை மேம்பாலம் வழியாக கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வேகமாக வந்த சொகுசு கார் ஒன்று ரவிவர்மா ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் பின்புறமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட ரவி வர்மா அந்த இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து தொடர்பாக பாண்டி பஜார் போக்குவரத்து காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து காரை ஓட்டி வந்த சாம்சுதின் என்பவரை கைது செய்தனர். விபத்தை ஏற்படுத்திய கார் களஞ்சியம் டெக்ஸ்டைல் என்ற ஜவுளிக்கடை உரிமையாளருக்கு சொந்தமானது ஆகும்.
இந்த சம்பவம் தொடர்பாக பாண்டி பஜார் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. ஆம்புலன்சுக்கு வழிவிடுவதற்காக காரை வேகமாக இயக்கி முன்னாள் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது காட்சியில் பதிவாகியுள்ளது. இருசக்கர வாகனம் நிலை தடுமாறி மேம்பால சுவர் மீது மோதி சம்பவ இடத்திலேயே பலியாகி இருப்பது தெரியவந்துள்ளது.