செப்டம்பர்,03-
விஜய் நடித்த பிரண்ட்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை விஜயலட்சுமி. இவர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதுகடந்த 2011-ம் ஆண்டு சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார் , ’சீமான் தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டார்’ எனபுகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் கடந்த வாரம் சென்னை, ராமாபுரம் போலீஸ் நிலையத்துக்கு வந்த விஜயலட்சுமி, சீமான் மீது நடவடிக்கை எடுக்கும் படியும், நிறுத்தி வைத்த வழக்கு விசாரணையை மீண்டும் தொடங்கும்படியும் புகார் மனு கொடுத்தார்.
’எனக்கும் சீமானுக்கும் 2008-ம் ஆண்டு மதுரையில் பெற்றோர் ஆசீர்வாதத்துடன் திருமணம் நடந்தது- பின்னர் கயல்விழியை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றிவிட்டார்’ என குறிப்பிட்டிருந்த விஜயலட்சுமி பல பக்கங்களில், ஏகப்பட்ட புகார்களை அடுக்கி இருந்தார்.
புகார் குறித்து இரு நாட்களுக்கு முன்னர், ராமாபுரம் போலீஸ் நிலையத்தில் விஜயலட்சுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். சுமார் 6 மணி நேரம் கோயம்பேடு துணை கமிஷனர் உமையாள் இந்த விசாரணையை நடத்தினார். இதில் பல விவரங்களை போலீசார் பெற்றுள்ளணர்.
இதன்தொடர்ச்சியாக சீமானிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது. அவர் இப்போது ஊட்டியில் முகாமிட்டுள்ளார்.அவரிடம் விசாரணை நடத்த 5 பேர் கொண்ட தனிப்படை போலீசார் ஊட்டியில் முகாமிட்டு உள்ளனர். இன்று நடைபெற உள்ள விசாரணை முடிவில் சீமான் கைது செய்யப்படலாம் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கூண்டில் சிறுத்தை சிக்குமா?
000