மதுரை அருகே உள்ள வரிச்சியூரை சேர்ந்த செல்வம், கிலோ கணக்கில் நகை அணிந்து நடமாடும் நகை கடையாக உலாவரும் தாதா ஆவார்.
கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய செல்வத்தின் நெருங்கிய கூட்டாளி செந்தில்குமார்.
மதுரை அருகே உள்ள குன்னத்தூரை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்ட இரண்டு பேர் கொலை வழக்கி ல் செந்தில்குமாரை முக்கிய குற்றவாளியாக போலீசார் சேர்த்தனர். போலீசில் செந்தில்குமார் சிக்கினால், தானும் கைது செய்யப்படலாம் என அச்சமடைந்த செல்வம், செந்தில்குமாரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.
சென்னைக்கு செந்தில்குமாரை வரவழைத்து, தனது நண்பர்கள் மூலமாக அவரை சுட்டுக்கொன்றார்.
செந்தில்குமாரை சிலர் பிடித்துக்கொள்ள, இன்னொருவர் அவரை துப்பாக்கியால் சுட்டுக்கொல்லும் கோரத்தை வீடியோவாக படம் பிடித்த நண்பர்கள் வரிச்சியூர் செல்வத்துக்கு அதனை வாட்ஸ் அப் மூலம் அனுப்பி வைத்தனர்.
பின்னர் செந்தில்குமார் சடலத் தை கண்டம் துண்டமாக வெட்டி, நெல்லைக்கு கொண்டு சென்று உடல் பாகங்களை தாமிரபரணி நதியில் வெவ்வேறு இடங்களில், வீசியுள்ளனர்.
பல மாதங்களுக்கு முன்பு நடந்த இந்த கோரக்கொலை குறித்து மதுரை தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வரிச்சியூர் செல்வத்தை இப்போது கைது செய்துள்ளனர். விசராணையில் இன்னும் பல தகவல்கள் வெளிவரக்கூடும் என்பதால் அதனை அறிய பெரும் ஆர்வம் நிலவுகிறது.
அது மட்டுமல்ல செந்தில்குமாரைக் கொன்றதை படம் எடுத்து வரிச்சூரியூர் செல்வத்துக்கு அனுப்பினார்கள் அல்லவா? அந்த வீடியோவா எங்காவது கிடைக்கமா என்ற தேடுதல் வேட்டையும் நடைபெற்று வருகிறது.
000