ஜனவரி-23.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோடா நகரத்தில் மூன்று வாரங்களில் ஆறு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர். இவர்கள் அனைவரும் நீட் , ஜீ போன்ற தேர்வுகளை எழுதுவதற்கு பயிற்சி பெற வந்தவர்கள்.
கோடா நகரத்தில் திரும்பிய பக்கம் எல்லாம் பயிற்சிக் கூடங்கள்தான். மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்கான நீட், ஜீ போன்ற தேர்வுகளை எழுதுவதற்கு மாணவர்களை இந்தப் பயிற்சிச் கூடங்கள் தயார் படுத்துகின்றன. கோடா நகரத்து பயிற்சிக் கூடங்களில் படித்தால் தேர்ச்சிப் பெற்று நல்ல கல்வி நிறுவனங்களில் படிக்கச் சேர்ந்துவிடலாம் என்ற நம்பிக்கை இந்தியா முழுவதும் பரவிக் கிடக்கிறது. இதற்காக மாணவர்கள் இங்கு வந்து குவிகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் கோடாவுக்கு வருகிற மாணவர்கள் எண்ணிக்கை இரண்டு லட்சம்.
குறுகிய காலத்தில் அனைத்தையும் படித்து தேர்வுக்கு தயாராகி விடவேண்டும் என்ற நிர்பந்தம் மாணவர்களை பெரும் மன அழுத்தத்திற்கு ஆளாக்குகிறது. இந்த அழுத்தத்தில் இருந்து மீள முடியாத மாணவர்களின் கடைசி வழியாக தற்கொலை நிலவுகிறது.
கடந்த இரண்டு வருடங்களாகவே இங்கு தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் விவரமான பெற்றோர்கள் யாரும் தங்கள் பிள்ளைகளை இங்கு அனுப்புவதில்லை. இதனால் பயிசிக் கூடங்கள் கொஞ்சம் காற்று வாங்க ஆரம்பித்தன. இப்போது மீண்டும் சூடுபிடித்துவிட்டது.
அகமதாபாத்தைச் சேர்ந்த அஷ்பா ஷேக் என்ற 24 வயது மாணவி இங்கு தங்கி நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தார். அவர் தாம் தங்கி இருந்த விடுதியிலேயே புதன் கிழமை அன்று தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்
அஷ்பா ஷேக் இறநத் இரண்டு மணி நேரத்தில் மகாவீர் நகரத்தில் தங்கியிருந்த
18 வயது மாணவர் ஒருவரும் விடுதியில் தூக்குப் போட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.இவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்.
இவர்கள் இரண்டு பேரைச் சேர்த்து கோடாவில் கடந்த மூன்று வராங்களில் தற்கொலை செய்து கொண்ட மாணவர்கள் எண்ணிக்கை ஆறாக உயர்ந்து உள்ளது.
கோடா நகரத்திற்குப் பயிற்சிப் பெற வரும் மாணவர்களுக்கு உளவியல் பயிற்சிக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக வலியுறுத்தப்படுகிறது. ஆனாலும் மரணங்கள் தொடர்கின்றன.
பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
*