நெல்லை பேருந்து நிலையத்தை திறக்கக்கோரிக்கை – வியாபாரிகள் போராட்டம்

ஏப்ரல்.19

நெல்லையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் பணி நிறைவு செய்யப்பட்ட பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியை பயன்பாட்டிற்குத் திறக்க வலியுறுத்தி கடைகளில் கருப்புக்கொடி கட்டி வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் ரூ. 79 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. பஸ் நிலையத்தின் ஒரு பகுதி கட்டுமானப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் பொதுமக்கள், வியாபாரிகள் நலன் கருதி பணிகள் நிறைவு பெற்ற பஸ் நிலையத்தின் ஒரு பகுதியை திறக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பஸ் நிலையம் திறக்கப்படாததால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி சந்திப்பு பகுதி வியாபாரிகள் பல்வேறு விதத்தில் பஸ் நிலையத்தை திறக்க கோரி மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இந்நிலையில் தமிழ்நாடு வணிகள் சங்கங்களின் பேரமைப்பு நெல்லை வடக்கு மாவட்டம் சார்பில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வடக்கு மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற போராட்டத்திற்கு மண்டல தலைவர் எம்.ஆர். சுப்பிரமணியன், தமிழ்நாடு நுகர்பொருள் விநியோ கஸ்தர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் வெங்கடேஷ், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வடக்கு மாவட்ட செயலாளர் நயன்சிங், மாவட்ட கூடுதல் செயலாளர் விநாயகம், மாவட்ட பொருளாளர் அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்கள், வியாபாரிகள் நலன் கருதி சந்திப்பு பஸ் நிலையத்தை திறக்க வேண்டும் அல்லது அதுவரை அனைத்து பஸ்களும் சந்திப்பு பஸ் நிலையம் வழியாக சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.இதில் சந்திப்பு வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தினர், ராஜா பில்டிங் வியாபாரிகள் நலச்சங்கம், த.மு. கட்டிட வியாபாரிகள் சங்கம், சிந்துபூந்துறை வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்த 800-க்கும் மேற்பட்டோர் கையில் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்த்ற்கு ஆதரவு தெரிவித்து சந்திப்பு பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. இந்த ஆர்ப்பாட்டத்தில் வணிகர் சங்கங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *