ஜனவரி-02.
மாத ஊதியம் பெறுவோர்க்கான வருமான வரி விலக்கு உச்ச வரம்பு மத்திய பட்ஜெட்டில் ₹12 லட்சமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது
இந்த சலுகையை அடுத்து இனி மாதம் ரூ. 1 லட்சம் வரை வருமானம் பெறுவோர் வரி செலுத்தத் தேவையில்லை என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார்.
அவர் எட்டாவது முறையாக இன்று பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில் அவர் தெரிவித்து முக்கிய அம்சங்கள் வருமாறு ..
இளைஞர்கள் முன்னேற்றம், வறுமை ஒழிப்பு, உணவு உத்தரவாதம் உள்ளிட்ட10 அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
பருப்பு உற்பத்தியில் தன்னிறைவு அடைய இலக்கு நிர்ணயத்து அரசு செயல்படுகிறது.
வேளாண் உற்பத்தியை பெருக்கவும், விவசாயிகள் வாழ்வை மேம்படுத்தவும் பட்ஜெட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கான ‘கிசான் கிரெடிட் கார்டு’ உச்சவரம்பு ₹3 லட்சத்தில் இருந்து ₹5 லட்சமாக உயர்த்தப்படும்.
ஜிடிபி கொண்டு ஒப்பிடும் போது மத்திய அரசின் கடன் சுமை குறைந்துகொண்டே போகிறது.
ஜல் ஜீவன் திட்டம் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு.
காப்பீட்டுத்துறையில் 100% அந்நிய முதலீடுக்கு அனுமதி.
வரி செலுத்துபவர்களுக்கு பல்வேறு வசதிகளை கடந்த 10 ஆண்டுகளாக மோடி அரசு செய்து வருகிறது.
அடுத்த வாரம் புதிய வருமான வரி சட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
ஆன்லைன் தொழில் சார்ந்த ஊழியர்களுக்கு புதிய காப்பீட்டு திட்டம் கொண்டுவரப்படும்.
பீகாரில் தேசிய உணவு தொழில்நுட்ப கல்வி மையம் அமைக்கப்படும்.
AI மையங்கள் அமைக்க ₹500 கோடி ஒதுக்கீடு.
பொம்மைகள் தயாரிப்பில் இந்தியாவை, சர்வதேச கேந்திரமாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
சுகாதாரம், வேளாண் உள்ளிட்ட 3 துறைகளில் AI மையம் அமைக்கப்படும்.
உள்கட்டமைப்பு முதலீடுகளுக்காக ₹1.5 லட்சம் கோடி, மாநிலங்களுக்கு வட்டியில்லாத கடன் வழங்கப்படும்.
பட்டியலின, பழங்குடியின பெண்கள் 5 லட்சம் பேருக்கு தொழிற்கடன்.
புற்றுநோய் உள்ளிட்ட அரியவகை நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படும் மருந்துகளுக்கு அடிப்படை இறக்குமதி வரியில் விலக்கு.
36 உயிர்காக்கும் மருந்துகளுக்கு முழுவதுமாக அடிப்படை சுங்கவரி விலக்கு.
அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் புற்றுநோய் சிகிச்சை மைய வசதி.
மருத்துவக் கல்லூரிகளில் அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 75 ஆயிரம் இடங்கள் சேர்க்கப்படும்.
அடுத்த ஆண்டில் மட்டும் சுமார் 10 ஆயிரம் புதிய மருத்துவ இடங்கள்.
லித்தியம் பேட்டரிக்கான இறக்குமதி சுங்கவரி ரத்து; எல்.இ.டி. திரைக்கான இறக்குமதி சுங்கவரி 20% ஆக அதிகரிப்பு.
போன்றவை மத்திய பட்ஜெட்டில் இடம் பெற்று உள்ள முக்கிய அம்சங்கள் ஆகும்.