பட்டம் துறந்தார் நயன்தாரா.

‘லேடி சூப்பர் பட்டம் வேணாம்’ என நயன்தாரா சொல்லிட்டாங்க.

இது குறித்து நயன்தாரா வெளியிட்டுள்ள அறிக்கை:

‘’நான் நடிகையாக பயணித்துவரும் இந்தப் பாதையில் மகிழ்ச்சி அடைகிறேன்.

என் வாழ்க்கை எப்போதும் ஒரு திறந்த புத்தகமாகவே இருந்துள்ளது- உங்கள் எல்லையற்ற அன்பும் ஆதரவும்தான் அதற்கு அழகு சேர்த்துள்ளது.

என் வெற்றியின்போது என்னை தோளில் சாய்த்து பாராட்டியதோடு, கடினமான தருணங்களில் என்னை தூக்கி நிறுத்தவும் நீங்கள் எப்போதும் இருந்தீர்கள்.

நீங்கள் பலரும் எனக்கு ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அன்புடன் அழைத்து வாழ்த்தியிருக்கிறீர்கள். உங்கள் பேராதரவால் உருவான இந்தப் பட்டத்திற்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்.

இனிமேல் என்னை ‘நயன்தாரா’ என்று மட்டும் அழைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

லேடி சூப்பர்ஸ்டார் பட்டம் வேண்டாம்

என் பெயர் மட்டும் தான் எனக்கு மிகவும் நெருக்கமான ஒன்று- அது என்னை மட்டும் குறிக்கிறது-

ஒரு நடிகையாக மட்டுமல்ல, ஒரு தனிநபராகவும். பட்டங்களும் விருதுகளும் மதிப்புமிக்கவைதான்

ஆனால் சில சமயங்களில் அவை நம்மை நம் வேலையிலிருந்து, நம் கலைத் தொழிலிலிருந்து, உங்கள் அன்பான தொடர்பிலிருந்து பிரிக்கக்கூடும்.

அதேசமயம், உங்கள் அனைவரையும் மகிழ்விக்க என் கடின உழைப்பு தொடர்ந்து இருக்கும். சினிமாதான் நம்மை ஒன்றாக இணைக்கிறது

அதை நாம் சேர்ந்து கொண்டாடிக்கொண்டே போகலாம்”.என்று நயன்தாரா அதிரடியாக தெரிவித்துள்ளார்.

அஜித்தை தொடர்ந்து, நயனும் பட்டம் துறந்துள்ளார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *