தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோவின் உண்மைத்தன்மையை அரசு கண்டறிய உத்தரவிடக் கோரி ஆளுநர் ஆர்.என்.ரவியை பாரதீய ஜனதா கட்சித் தலைவர்கள் சந்திக்க உள்ளனர்.
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.. தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மருமகன் சபரீசன் ஆகியோர் ஊழல் மூலம் ஒரே ஆண்டில் 30 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை முறைகேடாக சம்பாதித்து இருப்பதாகப் பேசியுள்ள குரல் பதிவு ஒன்று வெளியாகி உள்ளது. இதன் உண்மைத்தன்மையை சுதந்திரமான தடையவியல் தணிக்கை செய்யக்கோரி பா.ஜ.க. தலைவர்கள் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க உள்ளனர். பழனிவேல் தியாகராஜன், இந்த ஒலிநாடா பொய்யானது. யார் குரலில் வேண்டுமானாலும் இப்படி பேசி வெளியிட முடியும் என்று சமாளித்துக் கொண்டிருக்கிறார்.அந்த ஒலி நாடாவில் பேசிய அதே கருத்துக்களை நான் பேசுவதை போல ஒரு ஒலிநாடாவை தயாரித்து வெளியிடுமாறு சவால் விடுகிறேன்.
என்னுடைய குரல் மாதிரியை ஆய்வுக்கு நான் வழங்க தயார். தமிழக நிதி அமைச்சரும் தனது குரல் மாதிரியை வழங்க வேண்டும் இரண்டு ஒலி மாதிரிகளையும் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடக்கும் விசாரணை ஆணையத்திடம் ஒப்படைக்கலாம். இரண்டு ஒலி 2 நாடாக்களின் உண்மை தன்மையை நீதிமன்றம் விசாரித்து கூறட்டும். இவ்வாறு அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.