பிரம்மப்புத்திரா மீது சீனா அணை கட்டும் இடத்தில் நிலநடுக்கம்… அணை கட்டினால் ?

ஜனவரி-07்
சீனாவின் திபெத் பகுதியில் மலைத்தொடரில் இன்று ( செவ்வாய்க் கிழமை ) காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 100 பேர் இறந்துவிட்டனர். 130 பேர் காயம் அடைந்தனர்.

திபெத்தில் பொளத்தர்களின் புனித நகரமான ஷிகாட்சேயில் செவ்வாய் கிழமை காலை மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகி உள்ளது.

புத்த மதத்தில் தலாய் லாமாவுக்கு அடுத்த ஆன்மீக தலைவராக கருதப்படும்புத்த மதத்தின் பஞ்சன் லாமாவின் பாரம்பரிய இடமாகும்.

சீனாவின் அரசு தொலைக் காட்சிகள் ஒளிபரப்பிய வீடியோக்களில் வீடுகள் மற்றும் கட்டடங்கள் இடிந்து விழுகிறன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன. அரசாங்கத்தின் மீட்புக் குழுவினர் உடனடியாக இடிபாடுகளில் சிக்கி இருப்பவர்களை மீட்கும் காட்சிகளையும் சீனா நாட்டு தொலைக் காட்சிகள் காட்டின.

அடுத்தடுத்து சிறிய அளவிலான நில நடுக்கங்கள் ஏற்படக் கூடிய ஆபத்துகள் இருந்தாலும் பெரிய அளளிலான நிலநடுக்கம் உண்டாகும் ஆபத்து இல்லை என்று பூகோள ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்த உள்ளனர்.

நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள ஷிகாட்சே நகரம் எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்தில் உள்ள இடமாகும். அங்கு தற்போது கடுமையான குளிர் நிலவுகிறது. பல இடங்களை உறை பனி மூடியுளளது. நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்டு உள்ள இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது.

திபெத்தில் உண்டான நில நடுக்கம் அதனை ஒட்டி உள்ள நேபாள தலைநகர் காத்மாண்டுவிலும் உணரப்பட்டது.இந்த நில நடுக்கத்தால் நேபாளத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

கடந்த 1950- ஆம் ஆண்டில் திபெத் நிலப்பரப்பை சீனா அரசாங்கம் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது. அங்கு மதத் தலைவராக இருந்த தலாய் லாமா தப்பி இந்தியாவுக்கு வந்து தங்கி உள்ளார்.

இப்போது நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்டு உள்ள திபெத்தில் தான் பிரம்மபுத்திரா ஆறு உற்பத்தியாகிறது. அங்குதான் உலகத்தின் மிகப்பெரிய அணையை கட்டுவதற்கான வேலைகளை சீனா அரசாங்கம் தொடங்கி உள்ளது. நில நடுக்க ஆபத்துப் பகுதியில் அணை கட்டுவதை கைவிட வேண்டும் என்ற பல் வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

அவர்களின் கவலையை மெய்பிக்கும் வகையில் இப்போது நில நடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

சீனா அரசாங்கம் என்ன செய்யுமோ?
*
.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *