சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிக்கு இடையே ஓபிஎஸ், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க ஸ்டாலினின் மருமகன் சபரீசனை சந்தித்து பேசியதாக தெரிகிறது. சபரீசன் மற்றும் ஓபிஎஸ் சந்திப்பு தொடர்பான படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிவருகின்றன.
அதிமுகவுக்கு எதிராக ஓபிஎஸ் செயல்பட்டுவருவதாக ஈபிஎஸ் அணி குற்றஞ்சாட்டிவரும் நிலையில், இந்த சந்திப்பு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஓபிஎஸ்- சபரீசன் சந்திப்பு தொடர்பான புகைப்படங்களை டிவிட்டரில் பகிர்ந்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “பூனைக்குட்டி வெளியே வந்தது… சபரீசனுடன் ஓ.பி.எஸ் சந்திப்பு..” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் அண்மையில் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த நிர்மல் குமார், “இந்தக் கேவலமான கள்ள உறவுக்கு தான் தள்ளி வைக்கப்பட்டார்… அம்மாவின் தொண்டன் என சொல்லும் யாரும் தீயசக்தியுடன் நினைத்துக் கூட பார்க்க மாட்டார்கள். அவருக்கு அவருதான் அய்யா போல… #துரோகி_பன்னீர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.