ஜுலை, 20-
இன்னொருவர் உடல் அல்லது முகத்தின் மீது சிறு நீர் கழித்து அவமதிக்கும் செயல் என்பது அதிகரித்து வருகிறது.
ஆந்திராவில் ஓங்கோலைச் சேர்ந்தவர்கள் மோட்டா நவீன், அஞ்சி. இவர்களில் நவீன் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர். திருடுவது, ஏமாற்றிப் பணம் பறிப்பது ஆகியவை தான் இரண்டு பேருக்கும் தொழில். உள்ளூர் காவல் நிலையங்களில் இவர்கள் மீதும் வழக்குகளும் உள்ளன.
பணம் கையில் இருப்பதால் இரண்டு பேருக்கும் பெண் சினேகிதம் தேவைப்பட்டு உள்ளது. ஒரே பெண்ணை குறிவைத்து இரண்டு பேரும் சுற்றி வந்ததுதான் பிரச்சினைக்கு காரணம். இருவருக்கும் விரோதம் ஏற்பட்டு விட்டது.
அஞ்சி , செவ்வாய்க் கிழமை இரவு நவீனை சமரசம் செய்து அழைத்துச் சென்று மது வாங்கிக் கொடுத்து உள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது. அஞ்சிக்கு அவருடைய ஆட்கள் சிலர் துணையாக இருந்தார்கள்.
அனைவரும் சேர்ந்த நவீனை அடித்துக் கீழே தள்ளி அவருடைய வாயில் சிறு நீர் கழித்து உள்ளனர். அதை செல்போனில் படம் எடுத்து சமூக வளைதளங்களிலும் பதிவு செய்து கோபத்தை தீ்ர்த்துக் கொண்டனர்.
வீடியோ அனைத்து மட்டங்களிலும் வேகமாக பரவியது. ஓங்கோல் மாவட்ட போலிசார் ஆறு பேரை கைது செய்து உள்ளனர்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு மத்திய பிரதேசத்தில் பழங்குடி சமூக இளைஞர் மீது பாஜக நிர்வாகி சிறு நீர் கழித்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.அந்த மாநில முதலமைச்சர் சவுகான், பாதிக்கப்ட்ட நபரை வீட்டுக்கு அழைத்து அவருடைய கால்களை சுத்தம் செய்து தமது வருத்தத்தை தெரிவித்துக் கொண்டார். அந்த செய்தியை மறப்பதற்கு முன் அதே போன்று இப்போது ஆந்திராவில் நடந்தேறி இருக்கிறது.
000