சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகிய இருவரையும் போதிய ஆதரமில்லை என்று கூறி வேலூர் மாவட்ட நீதிமன்றம் விடுவித்து உள்ளது.
இப்போது உயர் கல்வித் துறை அமைச்சராக இருக்கும் பொன்முடி மற்றும் அவருடை மனைவி விசாலாட்சி மீது கடந்த 2006 -ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை விழுப்புரம் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு வேலூர் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் இவர்கள் இரண்டு பேரும் சொத்துக் குவித்ததற்கு போதிய ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கபட்டு உள்ளனர்.
சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து தற்போது பொன்முடிக்கு விடுதலை கிடைத்துள்ளது போதிலும் அரசு குவாரியிலிருந்து அதிக அளவு செம்மண் எடுத்ததாக தொடரப்பட்டு உள்ள வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் அவருடைய மகன் கொளதம சிகாமணி மீதும் குற்றஞ்சாட்டப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அவர் தாக்கல் செய்த மனு கடந்த வாரம் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.
000