ஆகஸ்டு,1-
மணிப்பூர் மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு முற்றிலும் செயலிழந்துள்ளதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் வேதனை தெரிவித்து உள்ளர்.
அந்த மாநிலத்தில் கடந்த மே மாதம் தொடங்கிய கலவரம் மூன்று மாதங்களாக நீடித்து வருகிறது. இந்த கலவரத்தின் போது குகி சமூகத்துப் பெண்கள் இரண்டு பேரை நிர்வாணப்படுத்தி அழைத்துச் சென்ற வீடியோ பத்து நாட்களுக்கு முன் வெளியானது. அந்தப் பெண்கள் இருவரும் தாக்கல் செய்த மனுக்கள் மீது தலைமை நீதிபதி அமர்வு இரண்டாவது நாளாக விசாரணை நடத்தியது.
அப்பாது டி.ஒய். சந்திரசூட், “மணிப்பூர் கவலரம் தொடர்பான வழக்குகளின் விசாரணை மந்தமாக நடக்கிறது, வழக்குப்பதிவு செய்வதில் காலதாமதம், கைது இல்லை, வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படவில்லை.
கடந்த 2 மாதங்களாக முதல் தகவல் அறிக்கையை கூட பதிவு செய்ய முடியாத, மோசமான சூழல் அங்கு இருந்துள்ளது; அரசு இயந்திரம் முற்றிலும் பழுதடைந்துள்ளது” என்று தெரிவித்தார்.
அங்கு கலவரத்தின் போது நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட பெண்களின் பெயர்கள் எக்காரணத்தைக் கொண்டும் வெளியே வரக்கூடாது; இது தொடர்பாக போலீசாரின் பதிவுகள், நீதிமன்ற ஆவணங்கள் என எதையும் பகிரக்கூடாது என்றும் சந்திரசூட் கேட்டுக் கொண்டார்.
மேலும் இந்த வழக்குகள் தொடர்பாக விளக்கம் அளிக்க மணிப்பூர் மாநில டி.ஜி.பி. வருகின்ற நான்காம் தேதி ஆஜராக வேண்டும் என்றும் தலைமை நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.
000