June 10, 23
2024 நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக, தென்சென்னை பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாட மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று சென்னை வருகிறார்.நாளை வேலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.
இன்று இரவு 8:45 ஐந்து மணிக்கு மகாராஷ்டிராவில் இருந்து தனி விமான மூலம் அமித்ஷா சென்னை வருகிறார். இதைத்தொடர்ந்து இரவு 9:05 மணிக்கு கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலுக்கு சென்று ஓய்வெடுக்கும் அவர் , இரவு 9:45 மணி அளவில் பாஜக நிர்வாகிகள்மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் சந்திக்கிறார்.
இதன் பின்னர் நாளை காலை 11: 40 மணியளவில் வேளச்சேரியில் தென் சென்னை பாஜக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். பகல் 1 :45 மணிக்கு சென்னையில் இருந்து ஹெலிகாப்டரில் வேலூருக்கு செல்கிறார் 2:45 மணிக்கு பள்ளிகொண்டாவில் நடக்கும் பொது கூட்டத்தில் அமித்ஷா உரையாற்ற இருக்கிறார்.