செயற்கை இழைகள் மற்றும் விஸ்கோஸ் இழைகளுக்கு பல்வேறு தரக் கட்டுப்பாட்டு ஆணைகள் மூலம் கட்டாயச் சான்றிதழ் பெறும் நடைமுறையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “செயற்கை இழைகள் மற்றும் விஸ்கோஸ் இழைகளுக்கு பல்வேறு தரக் கட்டுப்பாட்டு ஆணைகள் மூலம் கட்டாயச் சான்றிதழ் பெறும் நடைமுறையினால் பெரும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஒன்றிய அரசின் தரக் கட்டுப்பாட்டு ஆணை, ஜவுளித் தொழிலில் தற்போது நடந்துவரும் பணிகளில் பெரும் தடைகளை ஏற்படுத்தும். ஒன்றிய அரசின் தரக் கட்டுப்பாட்டு ஆணை, ஜவுளித்தொழிலில் தற்போது நடந்து வரும் பணிகளில் பெரும் தடைகளை ஏற்படுத்தும்.
இத்தகைய இழைகளுக்கு பொதுவான தரக் கட்டுப்பாடு ஆணைகள் பொருந்தாது. விஸ்கோஸ் பஞ்சு, செயற்கை இழை பஞ்சு மற்றும் நூல்களுக்கு அரசின் தரக்கட்டுப்பாடு ஆணைகளிலிருந்து விலக்கு அளித்திட வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.